»   »  ஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'!

ஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி 3' படம் வெளியாவது மீண்டும் தள்ளிப் போய்விட்டது.

இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் முடிந்து, சென்சாராகி வெளியீட்டுக்கு தயாராகயுள்ளது. ஆனால் பல காரணங்களாக தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டுள்ளது.


Surya's Si3 postponed again

'சிங்கம்' படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இத்திரைப்படம், இந்த மாதம் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர்.


போராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளி வைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

Read more about: surya சூர்யா s3
English summary
Surya's Si3 (Singam 3) has been postponed again due to Jallikkattu protests

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil