சிங்கம் 3 தலைப்பு மாறுகிறது... அதிகாரப்பூர்வ 'நியுமராலஜி' தலைப்பு ஜனவரி 7ல் வெளியாகும்

By Manjula

சென்னை: சிங்கம் 3 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வருகின்ற 7 ம் தேதி நள்ளிரவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்திருக்கிறார்.

சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து அதன் 3 வது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஹரி இறங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சுருதிஹாசன், அனுஷ்கா என்று 2 நாயகிகள் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Surya's Singam 3 Title on January 7

சுருதிஹாசன் சிஐடி அதிகாரியாக நடிக்க, அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக சிங்கம் 3 யில் நடிக்கிறார்.தொடர்ந்து தள்ளிப் போன இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் விசாகப்பட்டினத்தில் இருந்து தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு வேறு ஒரு தலைப்பினை வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.இந்தத் தலைப்பு நியுமராலஜி அடிப்படையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 2 படங்களுக்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.(முதலில் அனிருத் ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது)

இந்தப் படத்தின் படப்பிடிப்பினை பல்வேறு கண்டங்களில் நடத்த ஹரி முடிவு செய்திருக்கிறார். மேலும் முதல் 2 பாகங்களை விட இந்தப் பாகத்தில் அதிரடியை அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

இதனால் இந்தப் பாகத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு குறையிருக்காது என்று கூறுகின்றனர். சிங்கம் 3 தமிழில் வெளியாகும் பட்சத்தில் தமிழில் அதிக பாகங்கள் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை தட்டிச் செல்லும்.

ஏற்கனவே எந்திரன் 2 படத்தின் தலைப்பை எந்திரன் 2.0 என்று இயக்குநர் ஷங்கர் மாற்றிய நிலையில், தற்போது சிங்கம் 3 படத்தின் தலைப்பை ஹரி மாற்ற முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X