Just In
- 9 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 9 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 9 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 10 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Automobiles
வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜீவி பிரகாஷின் குரலில் மயங்கிய சூர்யா.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை : சூரரைப்போற்று படத்தில் வெய்யோன் சில்லி என்ற பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. அந்த காணொலி தற்போது வெளியாகி உள்ளது. அதில் சூர்யா மிகுந்த புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். படத்தை சூர்யாவே தனது 2டி எண்டர்டெய்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். நேற்று முன்தினம் படத்தின் இரண்டாம் பாடலான வெய்யோன் சில்லி பாடல் இதுவரை இந்திய சினிமாவில் நடக்காத முறையில் வெளியிடப்பட்டது.

இதனை மொத்த திரையுலகமே ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தது என்றே சொல்லலாம். இந்த பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. இதில் படக்குழுவுடன் நூறு அரசுப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர் .
அதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு.. ஹீரோ மாத்துனா படம் பண்ணலாம்.. உடனடியாக ஓகே சொன்ன டைரக்டர்!
இந்த பாடல் வெளியிடும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஜீவி.பிரகாஷ் விமானத்தில் இருக்கும் சேட்டிலைட் போனில் அவரின் குரலில் முதல் பாடலை பதிவு செய்கிறார் .

இதை முன் இருக்கையில் அமர்ந்த படி இருக்கும் சூர்யா மிக ஆர்வத்துடனும் மிக புன்னகையுடனும் ரசித்த படி அப்படியே அமர்ந்திருக்கும் குழந்தைகளை திரும்பி பார்க்கிறார். சிலருக்கு சில விசயங்களில் மன நிறைவு கிடைக்கும் அப்படி குழந்தைகளின் ஆனந்ததை பார்த்து மனம் மகிழ்ந்த சூர்யாவின் புன்னகையை பதிவு செய்த அந்த காணொலியை அதிகபடியான ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்
சூர்யா தனது அகரம் குழுமத்தின் மூலம் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அவர்களுக்கு கொஞ்ச நாள் முன்பு ஒரு போட்டி வைத்து அந்த போட்டியில் தேர்வாகிய நூறு பேரை தனது சொந்த செலவில் முதல் முறையாக விமானத்தில் ஏற்றி தனது படத்தின் பாடல் வெளியீட்டிலும் பங்கு கொள்ள வைத்துள்ளார் .
ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது சூரரைப்போற்று படம். மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் திரையரங்கை கலக்க உள்ளது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா வெற்றிமாறனுடன் கைகோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கும் ஜீவி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரிக்கிறார்.