»   »  பசங்களா... '24' பார்க்க வரீங்களா... ப்ரீயா வாட்ச் தர்றோம்!

பசங்களா... '24' பார்க்க வரீங்களா... ப்ரீயா வாட்ச் தர்றோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடித்துள்ள 24 படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு இன்றிலிருந்து இலசமாக வாட்ச் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் '24.


Surya's special gift for children

இப்படத்தில் வரும் 'டைம் ட்ராவல்' வாட்ச்சுகு கதையில் மிக முக்கிய பங்கு உண்டு. கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கருவியான அந்த வாட்ச் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக்கியமாக குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கள் குடும்பத்தோடு படத்தைப் பார்க்க வரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் 24 வாட்சை பற்றி கேட்டு ஆர்வமாகக் கேட்கிறார்களாம்.


இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விநியோகஸ்தர்கள் கேட்டதற்கிணங்க, இன்று முதல் 24 திரைப்படத்தை காண வரும் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக 24 ஸ்பெஷல் வாட்ச் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வார நாட்களில் ரசிகர்களை குடும்பத்தோடு தியேட்டருக்கு வரவழைக்கு இந்த 'ஏவிஎம் டெக்னிக்கை' சூர்யா பயன்படுத்துகிறார் போலிருக்கிறது!

English summary
Surya has announced a free watch gift to children watching his 24 movie with their family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil