»   »  சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்... 37 கோடிக்கு வியாபாரம்!

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்... 37 கோடிக்கு வியாபாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
37 கோடிக்கு விற்ற சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் !!- வீடியோ

சினிமா வாழ்க்கையில் நடிகர் சூர்யா நடித்து வெளிவரும் 35 வது படம் "தானா சேர்ந்த கூட்டம்"

இவ்வருட தொடக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளியான சிங்கம் - 3 எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது அவருக்கு அதிரடியாக ஒரு வெற்றி தேவை.

Surya's Thaana Sernth Koootam business

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ஜோடியாக நடித்துள்ளார்.

சிங்கம் - 3 தமிழ்நாட்டில் வசூல் செய்ததைக் காட்டிலும் அதிக விலைக்கு இப்படம் வியாபாரமாகியுள்ளது. சூர்யா, சந்தோஷ் சிவன், அனிருத், கீர்த்தி சுரேஷ் என நால்வரும்

இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் வியாபார வட்டாரத்தில் முக்கியமான படமாக தானா சேர்ந்த கூட்டம் கவனிக்கப்படுகிறது. பொங்கல் uண்டிகை என்பதால் வசூல் வழக்கத்தை காட்டிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

திருச்சியில் முன்னணி விநியோகஸ்தர், பைனான்சியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பரதன் பிலிம்ஸ் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 37 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இப்படத்தை சுமார் 55 கோடி ரூபாய்க்கு ஏரியா அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது பரதன் பிலிம்ஸ். முன்பு போல் அதிக விலைக்கு டிக்கட் விற்பனை செய்யமுடியாது.

போட்டிக்கு படங்கள் வரும் நிலையில் எதிர்பார்த்த கலெக்க்ஷன் கிடைக்காது என்பதால் இந்தத் தொகை வசூலாகுமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது.

English summary
Surya's Thaana Sernth Koootam has sold out for Rs 37 cr in Tamil Nadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X