»   »  மீண்டும் இணையும் 'மாஸ்' கூட்டணி?

மீண்டும் இணையும் 'மாஸ்' கூட்டணி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெங்கட் பிரபு-சூர்யா கூட்டணியில் கடந்தாண்டு வெளியான 'மாஸ்' சூர்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த மாஸை ஒரேயடியாக சரித்து விட்டது.

தட்டுத்தடுமாறி தற்போதுதான் அந்தத் தோல்வியில் இருந்து சூர்யா மீண்டு வருகிறார். இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணையப் போவதாக வெளியான தகவல்கள் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Surya Team Up with Venkat Prabhu

உண்மையிலேயே சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என விசாரித்தால் நடிப்பது உண்மைதான். ஆனால் முழுநீள ஹீரோவாக இல்லை என்று கூறுகின்றனர்.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் 'சென்னை 28' படத்தின் 2 வது பாகத்தில், சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து சூர்யாவின் கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனைக் காட்சியாக அமையும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் பாகம் போலவே 2 வது பாகத்தையும் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் இறுதிக்கட்ட காட்சிகளை தேனியில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

English summary
Sources Said Surya again Team up with Venkat Prabhu for Chennai 28 Sequel.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil