»   »  ஜோதிகாவின் அடுத்த படம் மகளிர் மட்டும்... தலைப்பு தந்த கமலுக்கு சூர்யா நன்றி!

ஜோதிகாவின் அடுத்த படம் மகளிர் மட்டும்... தலைப்பு தந்த கமலுக்கு சூர்யா நன்றி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

36 வயதினிலே படத்துக்குப் பிறகு ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு மகளிர் மட்டும் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தையும் ஜோதிகாவின் கணவர் சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார்.


Surya Thanked Kamal for givng Magalir Mattum title

திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றி, அவரைத் தொடர்ந்து நாயகியாக நடிக்க வைத்துள்ளது.


இப்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் ஜோதிகா. இந்தப் படத்துக்கு மகளிர் மட்டும் என்று தலைப்பிட்டுள்ளனர். தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இந்தப் படத்தை இயக்குகிறார்.


இப்படத்தில் நடிகை ஊர்வசி , பானு ப்ரியா , மற்றும் சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டேயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு க்ரிஸ் பிக்சர்ஸ். ஜோதிகா இப்படத்தில் ஆவணப் பட இயக்குநராக நடிக்கிறார்.


மகளிர் மட்டும் என்பது 90 களில் கமல் ஹாஸன் தயாரித்த படத்தின் தலைப்பு. இந்தத் தலைப்பை தங்களுக்குத் தந்ததற்காக கமல் ஹாஸனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.

English summary
Surya has thanked Kamal Hassan for allowing them to use Magalir Mattum title for Jyothika's next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil