»   »  கேரளாவை அதிரவிட்ட கோலிவுட் ஹீரோக்கள்... கொச்சினில் போக்குவரத்து பாதிப்பு!

கேரளாவை அதிரவிட்ட கோலிவுட் ஹீரோக்கள்... கொச்சினில் போக்குவரத்து பாதிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கேரளா ரசிகர்களுடன் சூர்யா

கொச்சின் : பொங்கல் ரிலீசாக இதுவரை 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் வெளியாவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்' படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

கொச்சினில், சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' ப்ரொமோஷனையும், விக்ரம், தமன்னா ஆகியோர் ஸ்கெட்ச் ப்ரொமோஷன் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

சூர்யா, விக்ரம் படங்கள்

சூர்யா, விக்ரம் படங்களுக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், அவர்களது ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் கேரளாவில் தங்கள் படத்தை ப்ரொமோட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

தானா சேர்ந்த கூட்டம் ப்ரொமோஷன்

சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் முழு வீச்சில் புரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். இருவருமே நேற்று ஒரே நாளில் கொச்சியில் முகாமிட்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

சூர்யா தனி ஆளாக தனது படத்தை ப்ரொமோட் பண்ணிய சூழ்நிலையில், 'ஸ்கெட்ச்' படத்தின் புரமோஷனுக்காக விக்ரமுடன் கதாநாயகி தமன்னாவும் கலந்துகொண்டார். இருவருக்குமான ரசிகர்கள் வரவேற்பால் கொச்சியில் சில இடங்களில் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது.

தொடரும் ப்ரொமோஷன்

நாளை மறுநாள் படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில், ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறவிருக்கும் 'தானா சேர்ந்த்அ கூட்டம்' பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் அனிருத் பெர்ஃபார்ம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suriya and Vikram are also very popular in Kerala and they have regularly promoted their films in Kerala during their film releases. Now, Suriya promotes his film 'Thaana serndha koottam' in kerala. Vikram and Tamannah are doing 'Sketch' promotional works in Cochin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X