»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மாயாவி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் சூர்யா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்.

அரசியல்வாதியாகப் போகும் நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் காரிலேயே கிரிவலம்சென்றார். நடிகர் அஜீத்தும் நள்ளிரவில் கிரிவலம் சென்றார். இப்போது சூர்யாவும் கிரிவலம் சென்றுள்ளார்.

ஜோதிகாவுடன் அவர் சேர்ந்து நடித்துள்ள படமான மாயாவி ரிலீஸ் ஆகிவுள்ளது. மாயாவி நன்றாக ஓடி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சிவராத்திரியையொட்டி அவர் கிரிவலம் சென்றார்.

தன்னந்தனியாக கார் மூலம், புதன்கிழமை நள்ளிரவு திருவண்ணாமலை வந்த சூர்யா, இன்று அதிகாலை 3மணியளவில் கிரிவலம் சுற்றினார். பின்னர் மலைப் பகுதியில் உள்ள சிவலிங்கங்களை தரிசனம் செய்தார்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று பயபக்தியுடன் வழிபட்டார்.

அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினர்.

அதன் பின்னர் பெரிய தெருவில் உள்ள ஆளாசிநாத சிவாச்சாரியாரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் சூர்யா ஆசிபெற்றார். அங்கேயே காலை உணவும் அருந்தினார். சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்த சூர்யா பின்னர்விடைபெற்றுக் கிளம்பினார்.

வெளியே வந்த சூர்யாவிடம் எதற்காக கிரிவலம் என்று கேட்டபோது, மாயாவி வெற்றிக்காக என்று ஒற்றைவரியில் பதிலளித்து விட்டு பறந்தார். அதற்கு மட்டும்தானா சூர்யா?

Read more about: cassette, chennai, kadal, shankar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil