»   »  நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியானது சூர்யாவின் 24 படத்தின் ஒரு நிமிட டீசர்!

நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியானது சூர்யாவின் 24 படத்தின் ஒரு நிமிட டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஞ்சான், மாசு என்ற இரு படங்கள், தமிழ் சினிமாவில் இளம் சிங்கமாய் வலம் வந்த சூர்யாவுக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தருவதாக அமையவில்லை.

ஆனால் நிச்சயம் இந்த வருத்தத்தை விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 24 படம் போக்கிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் நிறையவே இருந்தது.விஞ்ஞானம், த்ரில்லர், ஆக்ஷன் என புதுவகை ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒரு நிமிட டீசர் நேற்று வெளியானது. பரபரப்பும் புதுமையும் கலந்த இந்த டீசர் ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. இந்த டீசரிலேயே சூர்யாவின் 3 வித்தியாச கெட்டப்புகளைப் பார்க்க முடிந்தது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 9 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கோடை ஸ்பெஷலாக வரவிருக்கிறது 24.

English summary
The first teaser of Surya - Samantha starrer 24 has been released yesterday amidst big expectation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil