»   »  இது தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வு - சுசீந்திரன் அறிக்கை!

இது தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வு - சுசீந்திரன் அறிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி ஆகியோர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் கதாநாயகி மெஹ்ரீன் நடித்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. க்ளைமாக்ஸ் காட்சி மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

விமரசகர்கள், ரசிகர்களின் கருத்துக்கு இணங்க, 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் இருபது நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக இயக்குநர் சுசீந்திரன் மெஹ்ரீனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Suseenthiran about Nenjil Thuvivirundhal trimmed version

" 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி. 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்திற்கு நாங்கள் இரண்டு விதமான எடிட்டிங் வெர்சன் உருவாக்கினோம். ஹீரோயின் லவ் எபிஸோடு என ஒரு வெர்சனும், ஹீரோயின் இல்லாமல் முழுக்க கதைக்குத் தேவைப்பட்ட காட்சிகளும், அதைத்தொட்டு நடக்கும் திருப்பங்களை வைத்து ஒரு வெர்சன் என இரண்டு வெர்சன்களை உருவாக்கினோம்.

நேற்று மாலை முதல் ஹீரோயின் இல்லாத வெர்சன் அனைத்துத் திரையரங்குகளிலும் வெளியாகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரிலீஸுக்குப் பிறகு நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ் சினிமாவில் முக்கியமான நிகழ்வாக மாறலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

English summary
The scenes and climax of the movie 'Nenjil Thunivirundhal' have been trimmed by Director Suseenthiran. Director Suseenthiran has issued a statement on this.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil