»   »  இரண்டு முன்னணி இயக்குநர்கள் நடிக்கும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' - என்ன கதை?

இரண்டு முன்னணி இயக்குநர்கள் நடிக்கும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' - என்ன கதை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'வெண்ணிலா கபடிக்குழு', 'நான் மகான் அல்ல' தொடங்கி சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' வரை பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

இவர் தற்போது நடிகராக அறிமுகமாகிறார். 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிஷ்கின், விக்ராந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்தப் படத்தை இயக்குகிறார். ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சஸ்பென்ஸ்

என்னவாக இருக்கும்? என ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் சுசீந்திரன். அதில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அது என்ன என்கிற விபரம் மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

மிஷ்கின் - சுசீந்திரன் - விக்ராந்த்

அதற்குள், மிஷ்கின், சுசீந்திரன் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. படத்தின் டைட்டில் 6.30 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுட்டுப்பிடிக்க உத்தரவு

அதன்படி 6.30 மணிக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியானது. அதில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படத்திற்கு 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர்

இயக்குநர்

இந்தப் படத்தை 'கல்பதரு பிக்சர்ஸ்' பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தில் புதுமையான கதையம்சத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றிபெற்ற ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குகிறார்.

போலீஸ் அதிகாரியாக மிஷ்கின்

போலீஸ் அதிகாரியாக மிஷ்கின்

இந்தப் படத்தில் மிஷ்கின் போலீஸ் அதிகாரியாகவும், சுசீந்திரன் மற்றும் விஷால் தனியார் செக்யூரிட்டி வேலை செய்பவர்களாகவும் நடிக்கிறார்களாம். இருவரும் பணியில் இருக்கும்போது ஒரு குற்றச்சம்பவம் நடக்கிறது. குற்றவாளி யார் என போலீஸ் தேடுகிறது.

ஜனவரியில் ஷூட்டிங்

ஜனவரியில் ஷூட்டிங்

இந்தச் சிக்கலில் இருந்து சுசீந்திரனும், விக்ராந்த்தும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதையாம். 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. சென்னை, கோவை ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

English summary
Leading director Suseenthiran is currently turn as an actor. He plays a prominent role in the film 'Suttupidikka Utharavu'. Director Mysskin and Vikranth are also acting in the film. 'Thamizhuku En ondrai azuththavum' Ram Prakash Rayappa is directing this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil