»   »  ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்.. - என்ன காரணம்? #NenjilThunivirundhal

ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்.. - என்ன காரணம்? #NenjilThunivirundhal

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் கதாநாயகி மெஹ்ரீன் நடித்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதற்காக மெஹ்ரீனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படத்தின் எடிட்டட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

சுசீந்திரன் படம்

சுசீந்திரன் படம்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி நடிப்பில் உருவான 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஹீரோயின் காட்சிகள் நீக்கம்

ஹீரோயின் காட்சிகள் நீக்கம்

விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் மக்களின் வேண்டுகோள்களை கருத்தில் கொண்டு 'நெஞ்சில் துணிவிருந்தால்' படக்குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

அனைத்துக் காட்சிகளும் நீக்கம்

அனைத்துக் காட்சிகளும் நீக்கம்

இதுபற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், " 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் இருபது நிமிடக் காட்சிகளை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

புதிய வெர்சன்

புதிய வெர்சன்

படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் புதிய வெர்சன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

மன்னிப்பு

மன்னிப்பு

நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை இப்போது சூழ்நிலை காரணமாக நீக்கியிருக்கிறோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

English summary
The scenes featuring heroine Mehreen have been removed from the film 'Nenjil Thunivirundhal' directed by Suseenthian. Director Suseenthiran said that I apologize to actress Mehreen for this deletion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil