»   »  அறம் செய்து பழகு... சுசீந்திரனின் அடுத்த படம்!

அறம் செய்து பழகு... சுசீந்திரனின் அடுத்த படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படத்துக்கு அறம் செய்து பழகு என்று தலைப்பிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தை அன்னை ஃபிலிம் பேக்டரி என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இவர் ஏவிஎம், ஸ்டுடியோகிரீன் நிறுவனங்களிலும், இயக்குநர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர்.

Suseenthiran's next Aram Seithu Pazhagu

இத்திரைப்படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இதில் சந்தீப்க்கு ஜோடியாக 'கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா' என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் (Mehreen) இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

'வெண்ணிலாக் கபடிகுழு' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெ லஷ்மண் மீண்டும் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார்.

முதன்முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றுகிறார். வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

சத்தமின்றி படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் சுசீந்திரன்.

English summary
Director Suseenthiran's next movie has been titled as Aram Seithu Pazhagu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil