»   »  சுசீந்திரனின் அடுத்த ஹீரோ ஜெயம் ரவி?

சுசீந்திரனின் அடுத்த ஹீரோ ஜெயம் ரவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தனி ஒருவன் நாயகன் ஜெயம் ரவி.

சுசீந்திரன் கடைசியாக இயக்கிய பாயும்புலி திரைப்படம் ரசிகர்களின் நெஞ்சங்களில் எதிர்பார்த்த அளவிற்கு பாயவில்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியுற்ற நிலையில் சுசீந்திரன் தனது அடுத்த படத்தை தற்போது தொடங்கியிருக்கிறார்.

Suseenthiran's Next Hero Jeyam Ravi

இந்தப் படத்தில் தனி ஒருவன் படத்தின் மூலம் தரணியெங்கும் புகழ்பெற்ற ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். தற்போது மிருதன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி தொடர்ந்து ரோமியோ ஜூலியட் புகழ் லட்சுமணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த 2 படங்களையும் தவிர்த்து 3 வதாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. ரோமியோ ஜூலியட் மற்றும் தனி ஒருவன் படங்களின் மூலம் இந்த ஆண்டின் வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.

எனவே தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமுடன் இவர் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரவியின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பூலோகம் படத்தை வெளியிடும் முயற்சிகளில் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் இறங்கி இருக்கின்றனர்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜெயம் ரவி காணப்படுகிறார்.மற்றவர்களுக்கு எப்படியோ ஜெயம் ரவியைப் பொறுத்தவரை 2015 அவருக்கு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது.

English summary
Director Suseenthiran to Team up with Jayam Ravi for his Next Project Project. The Official Announcement will be Released soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil