»   »  அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சுசீந்திரன்!

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சுசீந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன? இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்- வீடியோ

சென்னை : பிரபல ஃபைனான்சியர் அன்புச் செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அவரது மிரட்டலால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் செய்தியால் தமிழ்த் திரையுலகமே கொதித்துப் போயுள்ளது. கந்துவட்டிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை வெளியிட்டார்.

ஃபைனான்சியர் அன்புச் செழியனால் பல சினிமாக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் அறிக்கை

அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவின் கடைசி தற்கொலை மரணமாக இருக்கவேண்டும் எனத் தொடங்கி, அதிர்ச்சித் தகவல்கள் நிறைந்த அறிக்கையை சற்று முன்பு வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

அதிர்ச்சித் தகவல்

' 'நான் கடவுள்' படம் உருவான நேரத்தில் இந்த அன்புச் செழியனால் அஜித் சார் பாதிக்கப்பட்டார். அப்போது அஜித் சாரும் அசோக்கின் இப்போதைய மனநிலைக்கு ஆளானார்' எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன். இந்தத் தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

திரைப் பிரபலங்கள் பலரும்

திரைப் பிரபலங்கள் பலரும்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான லிங்குசாமி, கௌதம் மேனன் உள்பட பல முன்னணி நடிகர்களும் அன்புச்செழியனிடம் சிக்கியுள்ளார்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களில் முக்கால்வாசிப் பேர் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும்

எந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும்

இசையமைப்பாளர் இமானிடம் கூட, எந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பதைக் கூட மறைமுகமாக சிரித்துக்கொண்டே மிரட்டியிருக்கிறாராம் அன்புச்செழியன்.

தண்டிக்க வேண்டும்

தண்டிக்க வேண்டும்

தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்குக் காரணமான அன்புச்செழியனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

English summary
Sasikumar's brother-in-law and official of company productions Ashok kumar, has committed suicide by the financier Anbuchezhiyan . In this case, Director Suseenthiran has released many shocking information about Anbuchezhiyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil