»   »  மாவீரன் கிட்டு.... இது சுசீந்திரனின் அடுத்த படத் தலைப்பு!

மாவீரன் கிட்டு.... இது சுசீந்திரனின் அடுத்த படத் தலைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷ்ணுவை திரையில் ஹீரோவாக வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகப்படுத்தியவர் சுசீந்திரன். இன்று விஷ்ணு ஒரு முக்கிய நடிகராகிவிட்டார்.

மீண்டும் ஜீவா படத்தில் இருவரும் இணைந்தனர்.

Suseenthiran - Vishnu's next Maaveeran Kittu

இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் - பார்த்திபன் நடிக்க, நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்குகின்றனர். இந்தப் படத்துக்கு மாவீரன் கிட்டு என்று தலைப்பிட்டுள்ளனர்.

படத்தின் நாயகியாக ஸ்ரீ திவ்யா ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவா படத்தில் ஏற்கெனவே ஸ்ரீதிவ்யாவும் விஷ்ணுவும் ஜோடி சேர்ந்தது நினைவிருக்கலாம். வழக்கம்போல சூரிக்கு இந்தப் படத்தில் முக்கிய வேடம்.

மாவீரன் கிட்டு படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி பழனியில் ஆரம்பமானது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது​,

​படத்தின் கதை ஈழப் பிரச்சினையுடன் தொடர்புடையதா என்ற கேள்விக்கு பதிலளித்த சுசீந்திரன், "மாவீரன் கிட்டு' இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம்," என்று முடித்துக் கொண்டார்.

படத்துக்கு கவிஞர் யுகபாரதி வசனம் எழுதி, பாடல்களையும் இயற்றுகிறார். டி இமான் இசையமைக்கிறார்.

English summary
Suseenthiran - Vishnu Vishal's next movie has titled as Maaveeran Kittu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil