twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தல'யை, தலைவா ஆக்கி வம்பில் மாட்டிவிடப் பார்க்கும் இயக்குநர்

    By Siva
    |

    சென்னை: இயக்குநர் சுசீந்திரனின் ட்வீட்டை பார்த்தவர்கள் அஜித் நன்றாக இருப்பது அவருக்கு பிடிக்கவில்லையோ என்கிறார்கள்.

    அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர் அஜித். எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டேன் என்று உறுதியாக உள்ளார். தனது நிலைப்பாட்டை அண்மையில் கூட அறிக்கை மூலம் மீண்டும் உறுதி செய்தார்.

    இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ட்வீட் போட்டுள்ளார்.

    மோதிரம் மாற்றியதும் எமோஷனல் ஆன விஷால், அனிஷா: வீடியோ இதோ மோதிரம் மாற்றியதும் எமோஷனல் ஆன விஷால், அனிஷா: வீடியோ இதோ

    அஜித்

    40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது தான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு... உங்களுக்காக காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன் என்று சுசீந்திரன் ட்வீட் செய்துள்ளார்.

    தெளிவு

    தல மட்டும் அல்ல அவரின் ரசிகர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.

    வேண்டாம்

    அரசியலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று ஒதுங்கி இருக்கும் அஜித்தை அழைக்க வேண்டாம். அவரின் கெரியரை காலியாக்க திட்டமிடுகிறீர்களா என்று சில ரசிகர்கள் சுசீந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரசியல் வேண்டாம், அஜித்தே போதும் என்கிறார்கள்.

    மகிழ்ச்சி

    அஜித் தொடர்ந்து படங்களில் நடித்தாலே மகிழ்ச்சி. அரசியல் எல்லாம் வேண்டாம். நீங்கள் தேவையில்லாமல் அவரை அரசியலுக்கு அழைக்காதீர்கள் சுசீந்திரன் என்கிறார்கள் தல ரசிகர்கள்.

    English summary
    Director Suseenthiran has requested Ajith Kumar to make his presence in politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X