»   »  பரோட்டா சூரியின் மகன், மகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட டைரக்டர் சுசீந்திரன்!

பரோட்டா சூரியின் மகன், மகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட டைரக்டர் சுசீந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காமெடி நடிகர் சூரி பல வருடங்களாகவே, திரைத்துறையில் இருந்தாலும், அவருக்கு பெயர் சொல்லும்படியான அறிமுகத்தைக் கொடுத்த படம் 'வெண்ணிலா கபடி குழு'. அந்தப் படத்தின் கேரக்டர் மூலமாகத்தான் பரோட்டா சூரி எனப் பெயர் பெற்றார்.

அதன்பின் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' தொடங்கி, 'பாண்டிய நாடு', 'ஜீவா', 'நெஞ்சில் துணிவிருந்தால்' வரை பல படங்களில் நடித்திருக்கிறார் சூரி. அதனால், இருவரும் நெருக்கமான நண்பர்கள்.

Suseenthiran with sooris son and daughter

இந்நிலையில், சமீபத்தில் விஜய் டி.வி-யில் காமெடி விருதுகள் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்படம், தொலைக்காட்சிகளில் காமெடி வேடங்களில் நடிப்பவர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விருது பெற்றார் சூரி. அவருடன் அவரது மகன், மகள் உள்ளிட்டோரும் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். சூரி மகன் மற்றும் மகளோடு டைரக்டர் சுசீந்திரன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதன் பின் இப்போதுதான் சூரியின் பிள்ளைகள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

English summary
Director Suseenthiran posted a photo with Soori's son and daughter on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X