நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!

சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நண்பர் சித்தார்த் குப்தா இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகாரை பூர்விகமாக கொண்ட சுஷாந்த் சிங், சின்னத்திரை மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.

இந்தியில் 2013ஆம் ஆண்டு வெளியான கய் போ சே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, பல படங்களில் நடித்தார்.

பெரும் பிரபலமான சுஷாந்த்

பெரும் பிரபலமான சுஷாந்த்

2016ஆம் ஆண்டு வெளியான எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி என்ற தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து நாடு முழுக்க பெரும் பிரபலமானார். ஒவ்வொரு அசைவிலும் தோனியை கண் முன் காட்டியிருப்பார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

தூக்கில் தொங்கிய சுஷாந்த்

தூக்கில் தொங்கிய சுஷாந்த்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பாலிவுட்டில் இருந்து ஒதுக்கப்பட்டதும், ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டது மற்றும் காதல் முறிவே அவரது தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது.

பிரிந்து சென்ற காதலி

பிரிந்து சென்ற காதலி

மேலும் வீட்டில் நண்பர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தபோதே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கவர்த்தி பிரிந்து சென்ற இரண்டு நாட்களிலேயே சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார்.

ஹேஷ்டேக்ஸ் ட்ரெண்டிங்

ஹேஷ்டேக்ஸ் ட்ரெண்டிங்

இதுதொடர்பான விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சுஷாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், #ssrbirthday, #SushantDay ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

உனக்கு மட்டும்தான் தெரியும்..

உனக்கு மட்டும்தான் தெரியும்..

இந்நிலையில் சுஷாந்தின் நண்பரான சித்தார்த் குப்தா, சுஷாந்துடன் நீச்சல் குளத்தில் விளையாடிய போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சகோதரா. நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். நீ எனக்கு என்னவென்று உனக்கு மட்டும்தான் தெரியும்.

எப்படி நேசிக்க வேண்டும்..

எப்படி நேசிக்க வேண்டும்..

நீங்கள் எனக்கு அளித்த அனைத்து அறிவும், ஞானமும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொட்ட அனைவருமே உங்கள் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்வார்கள். கான்ஷியஸ்னஸை புரிந்துகொள்ள வைத்ததற்கு நன்றி, நிபந்தனைகள் இல்லாமல் எப்படி நேசிக்க வேண்டும் என்று எனக்குக் கற்பித்ததற்கு நன்றி.

என் ஏலியன் சகோதரா..

என் ஏலியன் சகோதரா..

எனது வாழ்க்கையை மாற்றியமைத்து, என்னைக் கண்டுபிடிக்க உதவியதற்கு நன்றி. நீங்கள் சந்தித்த அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று நான் வானத்தை பார்த்து சிரிக்கிறேன், காரணம் நீங்கள் மீண்டும் சிரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என் ஏலியன் சகோதரா.. இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X