ஓராண்டாகியும் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை..மிஸ் யூ சுஷாந்த்.. நினைவு நாளில் உருகும் ரசிகர்கள்!

சென்னை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். நாடு முழுவதும் ரசிகர்களை கொண்ட சுஷாந்த் பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.

உலுக்கிய மரணம்

உலுக்கிய மரணம்

சுஷாந்தின் மரணம் நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிர்களையும் தோனி ரசிகர்களையும் உலுக்கியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

திடுக்கிடும் தகவல்கள்

திடுக்கிடும் தகவல்கள்

மும்பை போலீசார் மற்றும் பாட்னா போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சுஷாந்த் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை தொடங்கியது முதலே பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

காதலி மீது வழக்கு

காதலி மீது வழக்கு

அந்த வகையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்திக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது அவரது வாட்ஸ் அப் சாட் மூலம் அம்பலமானது. இதுதொடர்பாக என்சிபி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் மற்றும் சுஷாந்த் வீட்டு வேலைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.

போதை விருந்து

போதை விருந்து

வீட்டு வேலைக்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுஷாந்தின் பண்ணை வீட்டில் அடிக்கடி போதை விருந்து நடைபெறும் என்றும் இதில் ரியா சக்ரவர்த்தி உட்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் பங்கேற்றதும் தெரிய வந்தது.

வாரிசுகளின் ஆதிக்கம்

வாரிசுகளின் ஆதிக்கம்

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் நடிகைள் பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

சுஷாந்தின் காதலி ரியா மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில் பாலிவுட்டில் இருந்து வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

வாரிசுகளே காரணம்

வாரிசுகளே காரணம்

ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து வரிசையாக சுஷாந்த் சிங் நீக்கப்பட்டு வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால் சுஷாந்த் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்பட்டது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரன் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஐந்து அமைப்புகள் விசாரணை

ஐந்து அமைப்புகள் விசாரணை

சுஷாந்தின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன.

Recommended Video

Sushanth SInghஐ விட Dhoniக்கு அதிக தொகை! வெளியான MS Dhoni: The Untold Story சம்பள விவரம்
முதலாம் ஆண்டு நினைவுநாள்

முதலாம் ஆண்டு நினைவுநாள்

சுஷாந்த் மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இன்னமும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்படவில்லை. நடிகர் சுஷாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மிஸ் யூ சுஷாந்த்

மிஸ் யூ சுஷாந்த்

#SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வரும் ரசிகர்கள் மிஸ் யூ சுஷாந்த் என்றும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் #justiceforssr, Murdered என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது.

இன்னமும் நீதி கிடைக்கவில்லை

இன்னமும் நீதி கிடைக்கவில்லை

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல அது திட்டமிடப்பட்ட கொலை என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்து வருகின்றனர். #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X