»   »  ஒரு படம் ஹிட்டானதுக்கே தலைகால் புரியாமல் ஆடும் 'ரீல்' டோணி?

ஒரு படம் ஹிட்டானதுக்கே தலைகால் புரியாமல் ஆடும் 'ரீல்' டோணி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டோணி படம் ஹிட்டானதற்கு நான் தான் காரணம் என்று கூறும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை பார்த்து பாலிவுட்டே வியக்கிறது.

பீகாரை சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அங்கிருந்து பெரிய திரைக்கு வந்தவரால் ஹிட் கொடுக்க முடியாமல் திணறினார்.

இந்நிலையில் தான் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

டோணி

டோணி

எம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் டோணியாக சுஷாந்தை நடிக்க வைக்குமாறு பரிந்துரை செய்ததே கிரிக்கெட் வீரர் டோணி என்று கூறப்படுகிறது.

சுஷாந்த்

சுஷாந்த்

டோணி படம் வெளியான 2 வாரங்களில் ரூ.200 கோடி வசூல் செய்து ஹிட்டாகியுள்ளது. படம் ஹிட்டாக டோணி அல்ல நான் தான் காரணம் என்று சுஷாந்த் கூறி வருவதாக பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

சம்பளம்

சம்பளம்

நான் நடித்த டோணி படம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது என்று கூறி தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளார் சுஷாந்த். புதிய படங்களுக்கு அவர் ரூ.3.5 முதல் 4 கோடி சம்பளம் கேட்கிறார்.

ஒரு படம் தானே

ஒரு படம் தானே

ஒரு படம் தானே ஹிட்டாகியிருக்கு அதற்குள் இந்த ஆட்டமா என்று சுஷாந்தை பார்த்து வியக்கிறது பாலிவுட். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சுஷாந்த் டோணியாகவே வாழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the latest reports, all we hear is that success has gone to Sushant's head! As per the reports, a CEO of a top production house reveals that Sushant is acting pricey post the release of M S Dhoni and he (Sushant) also feels that the film was a success only because of him!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil