twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்கொலை இல்லை..கொலை..சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்..மருத்துவமனை ஊழியரின் பகீர் தகவல்!

    |

    மும்பை : பாலிவுட் நடிகர் சுஷாந் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை அது கொலை தான் என மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இத்தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

    சுஷாந்த் சிங்கிற்கு அவரது காதலி ரியா சக்கரவர்த்தி போதைப்பொருளை அதிக அளவு வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இது தொடர்பான வழக்கு ஒரு புறம் நடந்து வருகிறது.

     காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்.. அடேங்கப்பா சரியான புளியங் கொம்பு தான் போல! காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்.. அடேங்கப்பா சரியான புளியங் கொம்பு தான் போல!

    பாலிவுட் நடிகர் சுஷாந் சிங்

    பாலிவுட் நடிகர் சுஷாந் சிங்

    இந்நிலையில், சுஷாந்த் சிங்கை பிரேத பரிசோதனை செய்த ஊழியர், சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை அது கொலை என கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, ​​உடலில் பல காயங்கள் இருந்தன. கழுத்தில் இரண்டு மூன்று இடங்களில் காயங்கள் அடையாளங்கள் இருந்தன. பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் உடலினை புகைப்படம் மட்டும் எடுக்குமாறு கூறினார்.

    கொலை தான்

    கொலை தான்

    சுஷாந்தின் உடலை நான் முதன் முதலில் பார்த்த போதே அது தற்கொலை அல்ல கொலை என்று எனக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால், மூத்த அதிகாரிகள் கூறியதால், போட்டோ எடுத்துவிட்டு இரவில் பிரேத பரிசோதனை செய்தோம். இது தற்கொலை இல்லை, கொலை என பல முறை சொன்னேன் அதையாரும் காது கொடுத்து கேட்கவில்லை.

    கை, கால் உடைந்து இருந்தன

    கை, கால் உடைந்து இருந்தன

    சுஷாந்த் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. கை, கால்கள் உடைந்து இருக்கும் போது அவர் எப்படி தூக்கில் தொங்கியிருக்க முடியும், அது சாத்தியமே இல்லாத ஒன்று, ஒருவர் தூக்கில் தொங்கும் போது, ​​கழுத்தில் காணப்படும் தழும்புகள் வித்தியாசமாக இருக்கும். ஆனால், சுஷாந்த் சிங் கழுத்தில் காயங்கள் இருந்தன என்றார்.

    மனதில் பூட்டி வைத்திருந்தேன்

    மனதில் பூட்டி வைத்திருந்தேன்

    இரண்டு ஆண்டுகளாக இதை மனதில் பூட்டி வைத்திருந்தேன். ஏன் என்றால், உயர் அதிகாரிகளால் என் வேலைக்கு பாதிப்பு வரும் என்று பயந்து வெளியில் சொல்லாமல் இருந்தேன். கூப்பர் மருத்துவமனை பிணவறையில் பணியாற்றி வந்த நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது இதை தைரியமாக வெளியில் சொல்கிறேன் என்றார்.

    English summary
    Cooper hospital staff Roopkumar Shah has claimed that Sushant Singh Rajput was murdered and didn’t end his life
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X