»   »  யாரைப் பார்த்து, தள்ளிப் போய் விளையாடு..: டோணிக்காக கங்குலியை கலாய்த்த நடிகர்

யாரைப் பார்த்து, தள்ளிப் போய் விளையாடு..: டோணிக்காக கங்குலியை கலாய்த்த நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டோணியை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் டோணி சரியாக ஆடவில்லை, அவர் ஃபார்மில் இல்லை என்று சிலர் விமர்சித்தனர். புனே அணியை விட்டு அவரை நீக்க வேண்டும் என்று கூட சிலர் கூறினார்கள்.


இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.


கங்குலி

கங்குலி

டோணி ஒன்றும் நல்ல டி20 வீரர் கிடையாது. அவர் சேம்பியன் ஓடிஐ வீரர் ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவர் கடந்த 10 ஆண்டுகளில் ஒரேயொரு 50 தான் எடுத்துள்ளார். அது நல்ல ரெக்கார்ட் கிடையாது என்று கங்குலி பேட்டியில் தெரிவித்தார்.


கோபம்

கோபம்

டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கூல் கேப்டனாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு கங்குலியின் பேட்டியை பார்த்து கோபம் வந்துவிட்டது.


சுஷாந்த்

டோணி வந்து... என்ன சொன்னீங்க?? அந்த நிபுணர்கள் தற்போது எங்கே என்று வியக்கிறேன். உங்களை நினைத்து பெருமையாக உள்ளது மாஹி என்று டோணி புனே அணியின் வெற்றிக்கு வழிவகுத்தபோது ட்வீட்டியுள்ளார் சுஷாந்த்.


தல

தல

டோணி படத்தில் சுஷாந்த் டோணியாகவே வாழ்ந்திருந்தார். அவரின் தீவிர ரசிகன் இல்லை வெறியனாக மாறிவிட்டார் சுஷாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Sushant Singh Rajput played the role of MS Dhoni in the cricketer's biopic and he's now a pretty close friend of MSD. Sushant took to Twitter and posted a sly dig at Ganguly who criticised the cool captain.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil