»   »  வெள்ளத்தில் "மூழ்க"ப் போகும் டோணி நடிகர்!

வெள்ளத்தில் "மூழ்க"ப் போகும் டோணி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழை பொழிந்தது. இதன்காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கால் உத்தரகாண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். 5000-க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் படம் எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.

Sushanth singh rajput and sara alikhan are the pair in a new movie

இந்நிலையில், உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து பாலிவுட்டில் அபிஷேக் கபூர், 'கேதர்நாத்' என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

Sushanth singh rajput and sara alikhan are the pair in a new movie

'தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி' படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் இந்தப் படத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஏக்தா கபூர், கிரிராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Read more about: sushant singh rajput, bollywood
English summary
Sushanth singh rajput and sara alikhan are the pair in a new movie named 'Kedarnath' direction by Abishek kapoor.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil