»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென்னிந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ள பின்னணிப் பாடகிபி.சுசீலாவின் 50 ஆண்டு திரையுலக வாழ்வைப் பாராட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்படடுள்ளது.

பி.சுசீலா தனது 16-வது வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல் இன்று வரை அவரது தாய்மொழியான தெலுங்கு மற்றும் தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும்40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்.

5 முறை தேசிய விருதையும் பெற்று சாதனை படைத்துள்ள சுசீலா, வட இந்தியாவில் லதா மங்கேஷ்கருக்குஇணையான ரசிகர்களையும், பாராட்டுக்களையும் தென்னகத்தில் பெற்றவர்.

சுசீலாவின் திரையுலக பொன்விழாவையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலைய மைதானத்தில் மாலை 6 மணிக்கு யு.கே.முரளி குழுவினர்பி.சுசீலாவின் பாடல்களைப் பாடுவர். இதில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், திவ்யா உண்ணி, விந்தியாஆகியோரின் நடன நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

இதுதவிர சின்னி ஜெயந்த், தா. ரமேஷ் கண்ணா, வையாபுரி ஆகியோரின் காமெடி நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil