For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபஞ்ச அழகியாகி 25 வருசம் ஆச்சு... காதலர், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய சுஷ்மிதா சென்!

By Staff
|
Actor Simbu Marriage - சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு

மும்பை: பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதன் 25வது ஆண்டு விழாவை குழந்தைகள் மற்றும் காதலருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென்.

இந்தியாவின் சார்பில் முதன்முதலாக பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுஷ்மிதா சென். தற்போது 43 வயதாகும் சுஷ்மிதா, தனது 18வது வயதில் பிரபஞ்ச அழகியானார். கடந்த 1994ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை அவர் வென்றார். அந்தப் போட்டியில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடம் பிடித்தார்.

பிரபஞ்ச அழகியானதைத் தொடர்ந்து அவர் நடிகையானார். தற்போதும் தமிழிலும், பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அவர் ரட்சகன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். முதல்வர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

"அய்யய்யோ.. பேண்ட் பட்டன் போட மறந்துட்டீங்களே".. கார்த்தி ஹீரோயினை கலாய்க்கும் ரசிகர்கள்!

காதல்:

காதல்:

இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது தன்னைவிட 17 வயது குறைந்த ரோமன் ஷால் என்ற மாடலைக் காதலித்து வருகிறார். விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

கொண்டாட்டம்:

இந்நிலையில், தான் பிரபஞ்ச அழகி பட்டம் வென்றததன் 25வது ஆண்டு விழாவை, தன் குழந்தைகள் மற்றும் காதலருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். சுஷ்மிதாவிற்கு இன்ப அதிர்ச்சியாக இந்த ஏற்பாட்டை அவரது காதலரும், குழந்தைகளும் சேர்ந்து செய்துள்ளனர். கேக்கில் சுஷ்மிதா பட்டம் வென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் அவர் நடித்த படங்களின் ஸ்டில்கள் இடம் பெற்றிருந்தன.

இந்தியாவிற்கு நன்றி:

இந்தியாவிற்கு நன்றி:

இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் சுஷ்மிதா பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இப்படி ஒரு பெருமையான அடையாளத்தை எனக்குப் பெற்றுத் தந்த என் தாய் நாடான இந்தியாவிற்கு எனது நன்றி. கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் என் மீது அன்பைப் பொழிந்து வருகின்றனர். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானம். முதன்முறையாக இந்தியா பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றதன் 25வது ஆண்டை நாம் கொண்டாடி வருகிறோம்.

மகிழ்ச்சி:

இந்த நேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டையும், அங்குள்ள மக்களையும் நான் நினைவுகூருகிறேன். அந்த அழகான நாட்டில் நான் பட்டம்வென்றது மகிழ்ச்சிக்குரியது. இன்றளவும் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் சுஷ்மிதா எனப் பெயர் சூட்டி மகிழ்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார். கூடவே தான் பிரபஞ்ச அழகி பட்டம் பெற காரணமாய் இருந்தவர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

English summary
Twenty five years ago, Sushmita Sen brought home the coveted Miss Universe crown. So naturally, the 43-year-old actress was seen celebrating this special day with her daughters and boyfriend Rohman Shawl
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more