தன்னை விட 15 வயது சிறியவரை காதலிக்கும் நடிகை: ஜோடியாக தலை கீழாக நின்று புகைப்படம்
மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது காதலனுடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
42 வயதாகும் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் வாழ்வில் வந்த காதல் எதுவும் திருமணம் வரை செல்லவில்லை. ரினி, அலிஷா ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் சுஷ்மிதா சென் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது.

சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென் மாடல் ரொஹ்மான் ஷால் என்பவரை காதலிக்கிறார். இந்நிலையில் தனது காதலருடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அவர்.
காதல்
சுஷ்மிதா சென் ரொஹ்மானை திருமணம் செய்யப் போவதாக பேச்சு கிளம்பியது. இந்த பேச்சு சுஷ்மிதாவின் காதுகளை எட்டவே, அவர் விளக்கம் அளித்துள்ளார். தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சுஷ்
திருமணம் இல்லை என்று கூறினாலும் சுஷ்மிதா ரொஹ்மானை காதலிப்பதை மறுக்கவில்லை. சுஷ்மிதாவும், ரொஹ்மானும் சேர்ந்து ஜோடியாக பொது நிகழ்ச்சிகள், பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள். வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த காதலாவது கை கூட வேண்டும் என்று சுஷ்மிதாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புகைப்படம்
ரொஹ்மான் சுஷ்மிதாவின் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரொஹ்மான் சுஷ்மிதாவை விட 15 வயது சிறியவர். ஆனால் பாலிவுட்டில் தன்னை விட வயதில் சிறியவரை நடிகைகள் திருமணம் செய்வது புதிது அல்ல. ப்ரியங்கா கூட தன்னை விட 10 வயது சிறியவரான நிக்கை திருமணம் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











