டேட்டிங்கா? திருமணமா?...மீண்டும் போட்டோவை பகிர்ந்த சுஷ்மிதா சென்...இப்ப என்ன சொல்கிறார்?
மும்பை : இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளை அறிமுகப்படுத்திய லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
Recommended Video
இந்த போட்டோக்களுடன் என்னுடைய பார்ட்னர் என குறிப்பிட்டிருந்தார். இந்த போட்டோக்கள் செம வைரலாகி, சுஷ்மிதா சென்னும் லலித் மோடியும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா என கேள்வி எழுப்பினர்.

நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. வெறும் டேட்டிங் மட்டும் தான். ஆனால் ஒரு நாள் அது நடக்கலாம் என லலித் மோடி மற்றொரு போட்டோவை பகிர்ந்து, பதிலளித்தார் லலித் மோடி. மாலத்தீவில் இவர் தற்போது குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகிறார்கள்.
முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே சமயம், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது ஆர்யா வெப்சீரிஸில் நடித்து வரும் சுஷ்மிதா, மாடலான ரோமன் சாவ்லாவுடன் டேட்டிங்கில் இருந்து கடந்த ஆண்டு, பிரேக் அப் செய்து கொண்டார்.

நேற்று, புதிய வாழ்க்கையின் புதிய ஆரம்பம். காதலிப்பது திருமணம் என்று அர்த்தமல்ல என ட்வீட் செய்திருந்த சுஷ்மிதா சென், மகள்களுடன் எடுத்த செல்ஃபி ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், ஒயிட் லேஸ் கவுனில் பரந்து விரிந்த குளத்தில் திரும்பி பார்த்தபடி நிற்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சுஷ்மிதா சென், அமைதி மற்றும் சத்தங்களின் ரத்து என்ற கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டோவை எடுத்தது தனது கள் அலிசா சென் என்றும் சுஷ்மிதா குறிப்பிட்டுள்ளார். #bliss #positivity #love #duggadugga #trulyblessed ஆகிய ஹேஷ்டேக்குகளையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications