திருநங்கை கௌரி சவந்த் பயோபிக்கில் நடித்துள்ள சுஷ்மிதா சென்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகையான சுஷ்மிதா சென், புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

தாலி என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் சுஷ்மிதா சென் திருநங்கையாக நடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கெளரி சவந்த் பயோபிக்காக இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ள குறிப்பிடத்தக்கது.

ரட்சகன் நாயகி

ரட்சகன் நாயகி

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் 1996-ல் வெளியான 'Dastak' திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அந்தப் படத்தை தொடர்ந்து 1997ல் தமிழில் வெளியான 'ரட்சகன்' படத்தில் நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டிலும் தடம் பதித்தார். அதேபோல், ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் 'ஷக்கலக்க பேபி' என்ற பாடலில் ஆட்டம் போட்டு, இளசுகளின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் சுஷ்மிதா சென். அதன் பின்னர் இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் சுஷ்மிதா சென்.

வெப் சீரிஸில் சுஷ்மிதா

வெப் சீரிஸில் சுஷ்மிதா

சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 46 வயதாகிறது. இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென், இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதனால் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்ப்பதில் முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார் சுஷ்மிதா. இதனால் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர் தற்போது பிரபல ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

தாலி வெப் சீரிஸ்.

தாலி வெப் சீரிஸ்.

'Taali' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ், மும்பையைச் சேர்ந்த சமுக ஆர்வலரும் திருநங்கைகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் கௌரி சாவந்த் (Gauri Sawant) என்ற திருநங்கையின் பயோபிக்காக உருவாகியுள்ளது. கெளரி சாவந்த் மஹாரஷ்டிரா மாநில தேர்தல் ஆணையத்தின் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவி செய்வதே கெளரி சாவந்தின் சேவையாக உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், தாலி வெப் சீரிஸ்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென் ஷேர் செய்துள்ளார், மேலும், "Taali கைதட்ட மாட்டார், மற்றவர்களை கைதட்டச் சொல்வார்." இந்த அழகான நபரின் கேரக்டரில் நடிக்கும் பாக்கியமும் அவரது கதையை உலகிற்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். வாழ்வை கண்ணியத்துடன் வாழ்வது அனைவருக்குமான உரிமை" என்று பதிவிட்டுள்ளார். ரவி ஜாதவ் இயக்கியுள்ள இந்த தாலி வெப் சீரிஸ் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X