twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உயிரோடு இருக்க 8 மணிநேரத்திற்கு ஒரு முறை ஸ்டெராய்டு எடுத்த நடிகை

    By Siva
    |

    Recommended Video

    குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய சுஷ்மிதா சென்!

    மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தான் மரண வாசல் வரை சென்று வந்ததாக தெரிவித்துள்ளார்.

    பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதா சென். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திய அவர் அப்படியே கோலிவுட் பக்கமும் வந்துவிட்டு சென்றார்.

    இதுவரை திருமணம் செய்து கொள்ளாத அவர் ரினீ, அலிஷா என்று இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தன் சொந்த மகள்களாக வளர்த்து வருகிறார்.

    சுஷ்மிதா சென்

    சுஷ்மிதா சென் தனது காதலர் ரொஹ்மான் ஷாலுடன் சேர்ந்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதை எல்லாம் பார்ப்பவர்கள் ப்ப்பா, சுஷ்மிதா என்னமா ஃபிட்டாக உள்ளார் என்று வியக்கிறார்கள். இந்நிலையில் அவர் நோய்வாய்ப்பட்டு மரண வாசலை தொட்டுவிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    2014ம் ஆண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு சுஷ்மிதா சென்னுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்திருக்கிறார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் அட்ரினல் சுரப்பிகள் கார்டிசோல் என்கிற முக்கிய ஹார்மோனை சுரப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தனர்.

    மரணம்

    மரணம்

    கார்டிசோல் ஹார்மோன் சுரப்பது நின்றுவிட்ட நிலையில் மயக்கம் அடைந்து கண் விழித்த சுஷ்மிதா சென் ரொம்பவம் கொடுத்து வைத்தவர். ஏனென்றால் வழக்கமாக இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மயங்கினால் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளும் செயல் இழக்கத் துவங்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    கார்டிசோல் பிரச்சனையால் சுஷ்மிதா தன் வாழ்நாள் முழுவதும் ஸ்டெராய்டு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 8 மணிநேரத்திற்கு ஒரு முறை ஸ்டெராய்டு எடுக்க வேண்டும். உடல்நல பாதிப்பால் வீக்கானாலும் தன் செல்ல மகள்களுக்காக போராடி பழைய நிலைக்கு வர வேண்டும் என்ற உறுதியோடு இருந்துள்ளார் சுஷ்மிதா சென். அந்த போராட்டத்தில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.

    அதிசயம்

    அதிசயம்

    இரண்டு ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு சுஷ்மிதாவின் உடல்நலம் மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது செய்த பரிசோதனைகளில் சுஷ்மிதாவின் உடலில் கார்டிசோல் ஹார்மோன் மீண்டும் சுரப்பதை பார்த்து மருத்துவர்கள் வியந்தனர். இதையடுத்து அவர் ஸ்டெராய்டுகளை எடுப்பதை நிறுத்தினாலும் கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் ஒரு வழியாக குணமாகியுள்ளார்.

    English summary
    Bollywood actress Sushmita Sen said that she almost lost her life in the year 2014.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X