»   »  மகளுக்கும் 18, அம்மாவுக்கும் 18: இது நடிகையின் கணக்கு

மகளுக்கும் 18, அம்மாவுக்கும் 18: இது நடிகையின் கணக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது மகளின் 18வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் நடிகையானார். திரையுலகில் பெரிய அளவுக்கு வர முடியாவிட்டாலும் தன் சொந்த காலில் நிற்கிறார். சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

திருமணம் செய்து கொள்ளாத அவர் ரினி, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ரினி

ரினி

மூத்த மகளான ரினியின் பதினெட்டாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார் சுஷ்மிதா சென். பிறந்தநாள் அன்று மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

18

18

அன்பு மகள் ரினிக்கு 18 வயதாகிறது. நான் தாயாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. நானும், மகளும் ஒரே நேரத்தில் 18வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று தெரிவித்துள்ளார் சுஷ்.

நடிகை

நடிகை

ரினிக்கு தன்னை போன்றே நடிகையாக விருப்பம் உள்ளது என்று சுஷ்மிதா தெரிவித்துள்ளார். 2 வயதில் இருந்தே ரினிக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகமாம்.

படிப்பு

படிப்பு

படிப்பை முடிக்கும் முன்பு ரினியை நடிக்க அனுமதிக்க மாட்டேன். வாழ்க்கைக்கு படிப்பு மிகவும் முக்கியம். முதலில் படிக்கட்டும் அதன் பிறகு நடிக்கட்டும் என்கிறார் சுஷ்மிதா.

பள்ளிப்படிப்பு

பள்ளிப்படிப்பு

நான் பிளஸ் டூ பாஸ் செய்தவுடன் மிஸ் இந்தியா போட்டிக்கு சென்றுவிட்டேன். படிக்கவில்லையே என்று நினைத்தால் வருத்தமாக இருந்தது. அதனால் என் மகள்கள் டிகிரி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்று சுஷ்மிதா கூறியுள்ளார்.

English summary
Actress Sushmita Sen's elder daughter Renee turned 18 and her mommy dearest threw a lavish birthday party to bring in the special occasion.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil