ஒரே கட்டுரையில் உருக வைத்த மகள்.. கண்ணீர்விட்டு அழுத முன்னாள் உலக அழகி!
நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகள் அலிஷா தத்தெடுப்பு குறித்து எழுதிய கட்டுரையை வாசித்துக்காட்டும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
மும்பை: தத்தெடுப்பு குறித்து மகள் எழுதிய கட்டுரையால் நடிகை சுஷ்மிதா சென் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்தியாவில் இருந்து முதன்முதலில் உலக அழகிப் பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென் (42). இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

திரைத்துறையை தவிர சமூகப் பணிகளிலும் சுஷ்மிதா சென் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக ரேனே, அலிஷா இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை (28) சுஷ்மிதா காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இதற்கு சுஷ்மிதாவின் இரண்டு மகள்களும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகள் அலிஷா தத்தெடுப்பு குறித்து எழுதிய கட்டுரையை வாசித்துக்காட்டும் வீடியோவை பதிவிட்டுள்ளார். தனது மகள் படித்துக்காட்டிய கட்டுரையை நினைத்து தனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாக அந்த பதிவில் சுஷ்மிதா தெரிவித்துள்ளார். தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மிதாவை போலவே அவரது ரசிகர்களும் அலிஷாவை பாராட்டியுள்ளனர். சுஷ்மிதா சென் மீண்டும் இந்தி படங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. எனவே விரைவில் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











