»   »  நானும், நடிகர் ரித்திக்கும் ஏன் பிரிந்தோம்?: 2 ஆண்டுகள் கழித்து மவுனம் கலைத்த சூசன்

நானும், நடிகர் ரித்திக்கும் ஏன் பிரிந்தோம்?: 2 ஆண்டுகள் கழித்து மவுனம் கலைத்த சூசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்கான காரணத்தை சூசன் கான் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், சூசன் கானும் மூன்று ஆண்டுகள் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ரிதான், ரிஹான் என 2 மகன்கள் உள்ளனர்.

பாலிவுட்டின் அழகிய தம்பதிகளில் ஒருவர்களாக இருந்தார்கள்.

விவாகரத்து

விவாகரத்து

ரித்திக்கும், சூசனும் கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்து பெறும் முன்பே சூசன் தனது மகன்களை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

காரணம்

காரணம்

சூசனுக்கும், பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததால் அவர் ரித்திக்கை விட்டு பிரிந்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து ரித்திக்கும், சூசனும் அமைதி காத்தனர்.

ரித்திக்

ரித்திக்

பிரிந்துவிட்டாலும் மகன்களுக்காக அவ்வப்போது சந்தித்து பேசி வருகிறார்கள் ரித்திக், சூசன். கடந்த மே மாதம் அவர்கள் ஜோடியாக உணவகத்திற்கு சென்றதையடுத்து அவர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடும் என்று பேச்சு கிளம்பியது.

சூசன்

சூசன்

நானும், ரித்திக்கும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழப் போவது இல்லை. இனி ஒன்றாக வாழாமல் இருப்பது தான் சிறந்தது என்ற நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். போலியான உறவில் இருக்க விரும்பாமல் பிரிந்துவிட்டோம். ஆனால் தற்போதும் நாங்கள் நெருக்கமான நண்பர்களாகவே உள்ளோம் என சூசன் தெரிவித்துள்ளார்.

English summary
Sussanne Khan has revealed the reason for her divorce with actor Hrithik Roshan. They got divorced in 2014.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil