மரண பீதி.. சுழன்று அடிக்கும் ‘சுழல்‘ வெப்சீரிஸ்.. ட்விட்டர் விமர்சனம் !

சென்னை : புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் உருவான 'சுழல்' வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி உள்ளது.

இந்த வெப் தொடரில் பார்த்திபன், பிரதாப் போத்தன், ஐஸ்வர்யா ராஜேஷ் , கதிர், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். ஓடிடியில் இன்று வெளியாகி உள்ள சுழல் படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை பார்க்கலாம்.

புஷ்கர் - காயத்ரி

புஷ்கர் - காயத்ரி

ஆர்யா, பூஜான நடித்த ஓரம் போ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, வ குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கியுள்ளனர். விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சுழல் வெப் தொடர்

சுழல் வெப் தொடர்

விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்த தம்பதியினர் தற்போது 'சுழல்' என்ற இணையத் தொடருக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதுதான் கதை

இதுதான் கதை

பிரம்மா மற்றும் அனுசரண் முருகையன் உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப் தொடரில் 8 எபிசோடுகள் உள்ள ஒவ்வொரு எபிசோடிலும் சுவாரசியம் தலையை சுற்றவைக்கிறது. விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற 50 லட்சம் பணம் தேவைப்படுகிறது நண்பனை காப்பாற்ற பணத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார்? என்பதை மிகவும் த்ரில்லிங்காக கூறி கதையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்துள்ளனர்.

30 மொழிகளில்

30 மொழிகளில்

தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் இன்று ஒளிபரப்பாகி உள்ளது. இந்த வெப் தொடரைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். சுழல் தொடரின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

8 எபிசோடுகள்

8 எபிசோடுகள்

சுழல் வெப் தொடர் பார்த்தேன் 8 எபிசோடுகள் கிட்டத்தட்ட 6 மணிநேரம் சென்றே தெரியவில்லை.

சுழல் வெப்சீரிஸ் சிறந்த எழுத்து, நல்ல நடிப்பு, சமீப காலங்களில் சிறப்பாக உருவாக்கப்பட்ட திரில்லர் தமிழ் வெப்சீரிஸ் இது அனைவரும் பார்க்க வேண்டிய படம் என கூறியுள்ளார்.

பல திருப்பங்கள்

பல திருப்பங்கள்

சுழல் வெப் தொடரை பார்த்த ஒரு இணையவாசி தொடருக்கு, 4/5 மதிப்பீடு அளித்துள்ளார். பல திருப்பங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்ட க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். கணிக்க முடியாதது ட்விஸ்ட். அற்புதமான நடிப்பு. பின்னணி இசைமிகவும் அற்புதம். 8 அத்தியாயங்கள், 6 மணி 15 நிமிடங்கள் படம் ஓடுகிறது. சில கெட்ட வார்த்தைகள் இருக்கு ஆனால் குடும்பத்தையோட பாக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

தரமான வெப்தொடர்

தரமான வெப்தொடர்

சுழலில் 4 அத்தியாயங்களை பார்த்தேன் தரமாக உள்ளது. தொடர்ந்து தீ விபத்து மற்றும் ஒரு பெண்ணைக் காணவில்லை. அங்கிருந்து, மர்மம் அங்கிருந்து தொடங்கிறிது. இந்தத் தொடரில் காதல் உட்பட பல கதைகள் உள்ளன.இதன் முடிவு எப்படி உள்ளது என்பதை காண ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X