»   »  நடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை! - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்

நடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை! - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் உடன்பாடில்லாத நடிகரும் சங்க கட்டடக் குழு அறங்காவலருமான எஸ் வி சேகர், நாசருக்கு எழுதியுள்ள அதிருப்திக் கடிதம்.

திரு நாசர், தலைவர், மேனேஜிங் டிரஸ்டி , தென்னிந்திய நடிகர் சங்கம், சென்னை 17. வணக்கம்.

SVe Shekar disappoints with Nadigar Sangam Building event

கடந்த ஞாயிறு மாலை 4 பேர் மட்டும் கலந்து கொண்ட டிரஸ்ட் மீட்டிங்கில் கார்ப்பரேஷன் அனுமதி கிடைத்தால்தான் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று சொன்னதாக பூச்சி முருகன் சொன்னார்.

இப்போது அந்த அனுமதி கிடைக்காத நிலையில் மார்ச் 31 அன்றே வைக்க வேண்டிய அவசியம் என்ன? தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு முன் இதை வைத்தே ஆக வேண்டும் என அடம் பிடிக்கும் செயல் ஏதோ உள் நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.

நீங்களே எல்லாம் முடிவு செய்துவிட்டு அனுமதி கேட்பதுபோல் செய்வதை என்னால் ஏற்க இயலாது. எந்த ஒரு பெரிய நிகழ்வும் இரண்டாம் ஞாயிறுதானே நடத்துவோம்? தவிரவும் கடந்த ஆண்டு தங்களின் பிறந்த நாள் அன்று தானே 9 செங்கல்கள் வைத்து பூமி பூஜை போட்டோம். மீண்டும் அதே நிகழ்வை வேறு பெயரில் நடத்தும் நோக்கம் என்ன?

திருச்சி நடிகர் ஒருவர் பேசும் போது ஆளுக்கு ஒரு செங்கல் எடுத்துவரச் சொன்னதாக சொன்னாராம். இதற்கு காவல்துறை அனுமதி வாங்கி விட்டதா? டிரஸ்டியான எனக்கே சில பல விஷயங்கள் வாட்ஸ் அப் போன்ற தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளும் நிலை மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது.

நடிகர் சங்கம் டிரஸ்ட் ஒரு பொதுச் சொத்து. நம்மில் யாராவது தன் சொந்த பணத்தை மொத்தமாக போட்டு நமக்கு கட்டிடம் கட்டிக்கொடுத்தாலும் அவர் இஷ்டப்படி கட்ட முடியாது. நம் சங்கத்திலிருந்து நீக்கிய / செயற்குழுவிலிருந்து அவமானப்படுத்தியதாக ராஜினாமா செய்த காந்தி போன்றவர்கள் கலந்து கொள்கிறார்களா எனத் தெரியாத சூழலிலும், கார்ப்பொரேஷன் அனுமதி வாங்காத/ இன்னும் வராத நிலையிலும், நம் நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக நான் அனுப்பிய எந்த மெயிலுக்கும் இதுவரை எனக்கு பதில் வராத காரணத்தினாலும் என்னால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என் மனது இடமளிக்கவில்லை.

என்றும் அன்புடன்

எஸ் வி சேகர்

மேலும் நடிகர் சங்கத்தின் இப்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தான் 25 இமெயில்கள் அனுப்பியிருப்பதாகவும் அவற்றுக்கு இன்னும் நடிகர் சங்க நிர்வாகத்திடமிருந்து பதில் வரவில்லை என்றும் எஸ்வி சேகர், ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் எஸ்வி சேகர் விஷால் அணிக்கு ஆதரவாக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor SVe Shekar has opposed the Nadigar Sangam Foundation stone laying ceremony and write a letter to Nasser about his disappointment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil