»   »  நான் பலாத்காரம் செய்யப்படணும்னு சொல்றீங்களா?: இயக்குனரை விளாசிய நடிகை

நான் பலாத்காரம் செய்யப்படணும்னு சொல்றீங்களா?: இயக்குனரை விளாசிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
எழுத்துப் பிழைகளோடு ட்வீட் செய்தபோதெல்லாம் மன்னிப்பு கேட்க தோன்றவில்லையா கமல் - நெட்டிசன்கள்

மும்பை: நான் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறீர்களா என பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியிடம் கேட்டுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்த பத்மாவத் படத்தை பார்த்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் 'வி' வார்த்தையை பயன்படுத்தி ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார்.

'வி'யை தாண்டியும் வாழ்க்கை உள்ளது என்றார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பெண்மையை கவுரவிக்கும் படத்தை பார்த்து 'வி' வார்த்தையை சொன்ன ஸ்வரா பாஸ்கருக்கு பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ட்வீட்

ட்வீட்

ஸ்வராவீன் கடிதத்தை பார்த்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அவரை விளாசியுள்ளார். ஸ்வராவை போலி பெண்ணியவாதி என்றும், அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பதில்

பதில்

விவேக் தன்னை விளாசியதை பார்த்த ஸ்வராவோ, நான் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறீர்களா? இதை தான் சொல்கிறீர்களா விவேக்? ரொம்ப கீழ்த்தரமாக உள்ளது என்று ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

பலாத்காரம்

பலாத்காரம்

போலி பெண்ணியவாதியான ஸ்வரா பாஸ்கருக்கு பலாத்காரத்தை பற்றி மட்டும் தான் யோசிக்கத் தோன்றுகிறதா? நாம் எதை சொன்னாலும் அதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று விவேக் பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

ஸ்வரா பாஸ்கர் ஒரு வரலாற்று படத்தை பார்த்துவிட்டு இப்படி பேசியுள்ளது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று பாலிவுட்டில் கூறுகிறார்கள். ஸ்வராவின் கடிதத்தை பார்த்துவிட்டு பத்மாவத் படக்குழு கோபம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Swara Bhaskar tweeted that, 'I'm sorry did u just suggest that i go get myself raped?????????? Like seriously? You typed out this tweet Vivek... ????? I'd say pretty low and sick even by your own abysmal standards of conduct & civility.' She tweeted so after seeing film maker Vivek Agnihotri's tweet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil