»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
சொர்ணமால்யா, புளோரா ஆகியோர் கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஸாரி, எனக்கு கல்யாணமாயிடுச்சு, ஆனாலும்பரவாயில்ல.. படத்துக்கு சான்றிதழ் தர சென்சார் போர்ட் மறுத்துவிட்டது.

படத்தில் கவர்ச்சியும் ஆபாசமும் எல்லை தாண்டிவிட்டதாலும் ஆபாசமான வசனங்கள் ஏராளமாய் மலிந்திருப்பதாலும்சென்னையில் உள்ள சென்சார் போர்ட் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மறுத்துவிட்டது.

எத்தனை ஏ வேண்டுானாலும் போட்டுக்குங்க.. சான்றிதழை மட்டும் குடுங்க என்று தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டதாம.

ஆனால், எத்தனை ஏபோடுகிறோமோ அத்தனை அளவுக்கு படத்துக்கு மசுவு தான் கூடும் என்பதாலும் இதுக்கு எத்தனை ஏதான் போட்டாலும் பத்தாதே என்பதாலும் படத்தை சென்சார் செய்யவே தணிக்கை வாரியம் மறுத்துவிட்டதாம்.

இதையடுத்து மும்பையில் உள்ள அப்பீல் கமிட்டிக்கு காவடி எடுக்க படத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

இந்தப் படம் கொஞ்சம் ஓவராகவே போகுதே.. சென்சாரில் தப்புமா என்று சமீபத்தில் நாம் திருவாய் மலர்ந்தது உங்களுக்குநினைவிருக்கலாம். அந்த வாய் முகூர்த்தம் இப்போது பலித்திருக்கிறது.

நடிகை சொர்ணமால்யா, புளோரா, நடிகர் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் புளோராவும், சொர்ணமால்யாவும்போட்டி போட்டுக் கொண்டு வெட்கத்துக்கு பை பை சொன்னார்கள்.

புளோரா அளவுக்கு சொர்ணா போக மாட்டார் என்று அனைவரும் நினைத்திருக்க, சொர்ணா கிட்டக்க கூட புளோரா போகமுடியாது என்ற அளவுக்கு இறங்கி வந்து கவர்ச்சிப் பிரளயம் ஏற்படுத்திவிட்டார் சொர்ணமால்யா.

அதுவும் காஞ்சி விஷயத்தால் படத்தில் இருந்து சொர்ணாவைத் தூக்கலாமா என தயாரிப்பாளர் தரப்பு யோசிக்க ஆரம்பிக்க,சும்மா துண்டைக் காணோம் துணியைக் காணோம் வெவலுக்கு கவர்ச்சி காட்டி தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்சொர்ணா. காஞ்சி விவகாரத்துக்குப் பின்னர் தான் இந்தப் படத்தில் சொர்ணாமால்யா அதிகமாக வெளுத்து வாங்கினார்என்கிறார்கள்.

படத்தின் கதை என்ன தெரியுமோ?. ஸ்ரீமனின் நண்பர்கள் அவரது மனைவியான சொர்ணமால்யா மீது ஆசைப்படுவதாகவும்,அவரை அடைய முயற்சிப்பதும் தானாம். இதை சொர்ணாவும் ஜாலியாக எடுத்துக் கொண்டு கலக்குவது மாதிரி போகிறதாம்கதை.

சென்சாருக்கு வந்த படத்தைப் பார்த்த அதிகாரிகள் கதையின் கருவையும், அதைச் சுற்றி வந்த காட்சிகளையும் கண்டு அதிர்ந்துபோய்விட்டார்களாம். இவ்வளவு வக்கிரமான கருத்துடன் படத்தை எப்படி அனுமதிக்க முடியும் என்று இயக்குனர் சாகரிடம்கேட்டுள்ளனர்.

ஆனால், கடைசியில் எல்லோரும் திருந்துவது மாதிரி தானே காட்சி இருக்கு என்று சொல்லப்பட்ட சால்ஜாப்பை அதிகாரிகள்ஏற்கவில்லை.

இதைத் தவிர வசனங்களும் படு ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடனும் இருப்பதாகவும் சொன்ன சென்சார் போர்ட்அதிகாரிகள் இதற்கு சான்றிதழே தர முடியாது என்று கூறிவிட்டனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil