For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திரைத் துளி

  By Staff
  |

  ஸ்வர்ணமால்யாவுக்கும் அவரது கணவர் அர்ஜூனுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

  சன் டிவியின் இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான ஸ்வர்ணமால்யா, மெதுவாகசினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

  இந் நிலையில் அமெரிக்காவில் பணியாற்றி வந்த எம்.பி.ஏ. பட்டதாரியான அர்ஜூனை (28) கடந்த2002ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் ஸ்வர்ணமால்யா. ஆனால், ஒரே வருடத்தில்கணவரைப் பிரிந்து திரும்பி வந்தார்.

  வந்த கையோடு கணவர் மீது வரதட்சணை புகாரைக் கொடுத்த ஸ்வர்ணமால்யா, மீண்டும்சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து சென்னை வந்த அர்ஜூனையும்ஸ்வர்ணமால்யாவையும் அழைத்துப் பேசிய அடையாறு பெண் காவல் நிலைய போலீசார்சமாதானம் செய்து வைத்தனர்.

  தாயாரிடம் இருந்து விலகி வந்த ஸ்வர்ணமால்யாவுடன் பெசன்ட் நகரில் வீடு பிடித்து தங்கினார்அர்ஜூன். சினிமா வேண்டாம் என அவர் கூறியதை சொர்ணமால்யா ஏற்காமல், தொடர்ந்துநடிப்பேன் என்று அடம் பிடித்ததாகத் தெரிகிறது.

  இதையடுத்து விட்டுக் கொடுத்துள்ளார் அர்ஜூன். அத்தோடு, சூட்டிங்குக்கு மாருதி காரில் போய்வருவது சங்கடமாக உள்ளதாக ஸ்வர்ர்ணமால்யா கூறியதால், ஸ்கோடா காரையும் தவணைக்குவாங்கிக் கொடுத்துள்ளார் அர்ஜூன். (இதற்கு மாதம் ரூ. 17,000 பணம் கட்டுவதாக சொல்கிறார்).

  மலையாளப் படங்களில் மால்யா அதிகம் நடிக்க ஆரம்பிக்க, மீண்டும் முட்டல் மோதல் வந்துள்ளது.இந் நிலையில் அமெரிக்க வேலை பறிபோய்விட, பெங்களூரில் வேலை கிடைக்க அங்குபோய்விட்டார் அர்ஜூன்.

  இதையடுத்து ஸ்வர்ணமால்யா மீண்டும் தனது தாய், தந்தையுடன் வசிக்க ஆரம்பித்துள்ளார்.தன்னுடன் வசிக்க பெங்களூர் வந்துவிடுமாறு அர்ஜூன் கேட்டுள்ளார். ஆனால், சொர்ணமால்யாஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

  இந் நிலையில், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு குடும்ப நல நீதிமன்றத்தில் அர்ஜூன்ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணையில் இருக்கும் நிலையில் கணவர் அர்ஜூன்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார் மால்யா.

  அதில் அவர் கூறியிருப்பதாவது:

  ரூ. 15 லட்சம் செலவழித்து என் திருமணத்தை பெற்றோர் நடத்தி வைத்தனர். சந்தோஷமாகத் தான்அமெரிக்கா சென்றேன். அவரோ சந்தோஷத்தைக் கெடுக்கும் விதத்தில் தான் செயல்பட்டார்.

  சினிமாவில் சம்பாதித்த பணத்தை எங்கே வைத்துள்ளாய், அதை உன் பெற்றோரிடம் இருந்துவங்கிக் கொடு என டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். இதனால் அவரை விட்டுப் பிரிந்து சென்னைவந்தேன்.

  ஆனாலும் அவர் திரும்பி வந்து சமரசம் பேசினார். சினிமாவில் நான் தொடர்ந்து நடிக்கலாம்,மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றார். அதை நம்பி மீண்டும் இல்லறத்தில் ஈடுபட்டேன்.

  ஆனால், சினிமாவில் நடித்தால் மாதம் ரூ. 60,000த்தை நீ எனக்குத் தர வேண்டும் என திடீர்கண்டிசன் போட்டார். இதனால் மோதல் வந்தது. இந் நிலையில் திடீரென என்னை தவிக்கவிட்டுவிட்டு, வீட்டுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பெங்களூரில் குடியேறிவிட்டார்.

  கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி திருமண நாள் வந்தது. கொடுத்த கஷ்டத்தையெல்லாம் மறந்துவிட்டுஅர்ஜூனுடன் சேரலாம் என்று பெங்களூர் சென்றேன். ஆனால், அங்கு நான் அவரால்அவமானப்படுத்தப்பட்டேன்.

  ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டில் தான் அவர் வசித்தார். மாமியார், மாமனாரும் உடன் இருந்தனர்.கணவருடன் சந்தோஷமாக பேசக் கூட வாய்ப்பில்லை. இரவில் குடிபோதையில் தான் வீட்டுக்கேவந்தார்.

  அவரது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். நான் மறுத்தேன். இதையடுத்து இரவில்அடித்து, உதைத்து வெளியில் விரட்டி விட்டார். இரவு முழுக்க பக்கத்து வீட்டில் அடைக்கலம் பெற்று,அங்கேயே தூங்கிவிட்டு காலையில் சென்னை கிளம்பி வந்தேன்.

  என் கணவருடன் இனியும் நான் சேர்ந்து வாழ முடியாது. எனக்கு வரதட்சணையாகத் தகப்பட்ட 60பவுன் நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், வைர கம்மல், வைர மோதிரம் ஆகியவற்றைஎன் கணவர், மாமியார் வித்யா, மாமனார் ராஜாராம் ஆகியோரிடம் இருந்து திரும்பப் பெற்றுத் தரவேண்டும்.

  இவ்வாறு ஸ்வர்ணமால்யா தனது மனுவில் கூறியுள்ளார்.

  இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள அடையாறு போலீசார் அர்ஜூன் மற்றும் அவரதுபெற்றோரை விசாரிக்க பெங்களூர் சென்றனர். ஆனால், அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது.

  அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது ஸ்வர்ணமால்யாவை நள்ளிரவில் அர்ஜூன் வெளியில்விரட்டியது உண்மை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அர்ஜூனைம் பெற்றோரையும் கைதுசெய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  இந்த விவகாரத்தில் ஸ்வர்ணமால்யாவின் தாயார் மீது அர்ஜூன் தரப்பு பாய்கிறது. சந்தோஷமாகஅமெரிக்காவில் வசித்து வந்தபோது அங்கு வந்த தாயார் தான் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம்,சென்னைக்கு வந்துவிடு என்று கூறி ஸவர்ணமால்யாவின் மனதை மாற்றியதாக் கூறுகிறது.

  அதன் பிறகே பிரச்சனைகள் உருவானதாக அர்ஜூன் தரப்பு சொல்கிறது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X