»   »  அடுத்தபடியாக, 'சுப்பிரமணியபுரம்' சுவாதி குத்துப்பாட்டுக்கு பாடுவார்... உடன் ஒலிப்பது உங்கள் சிம்பு!

அடுத்தபடியாக, 'சுப்பிரமணியபுரம்' சுவாதி குத்துப்பாட்டுக்கு பாடுவார்... உடன் ஒலிப்பது உங்கள் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ‘சுப்பிரமணிய புரம்' படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுவாதி, அப்பாடக்கர் படம் மூலம் பாடகியாகிறார்.

சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய்யின் ஜோடியாக நடித்தவர் நடிகை சுவாதி. அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்களிரண்டால் உன் கண்கள் இரண்டால்...' பாடலில் கண்களினாலேயே கவிதை பாடி இருப்பார் சுவாதி.

சுப்பிரமணியபுரத்தைத் தொடர்ந்து வடகறி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் சுவாதி.

ஒரு பாடகி உதயமாகிறாள்...

ஒரு பாடகி உதயமாகிறாள்...

இந்நிலையில், தற்போது பாடகியாகவும் புது அவதாரம் எடுக்கிறாராம் சுவாதி. ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் அப்பாடக்கர் படத்தில் அவர் பாடல் ஒன்றைப் பாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்பு ஜோடியாக...

சிம்பு ஜோடியாக...

குத்துப் பாடலான இதை நடிகர் சிம்புவுடன் சேர்ந்து சுவாதி பாட உள்ளாராம். இப்படத்திற்கு இசை டி.இமான்.

விரைவில் பாடல் பதிவு...

விரைவில் பாடல் பதிவு...

இந்த குத்துப் பாடலை சுவாதி பாடினால் நன்றாக இருக்கும் என்பது இமானின் விருப்பமாம். இது தொடர்பாக அவர் சுவாதியை அணுகி சம்மதம் பெற்று விட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் பாடல் பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சுவாதியும்...

சுவாதியும்...

ஆண்ட்ரியா, ஸ்ருதி, லட்சுமிமேனன், ரம்யா நம்பீசன் என சமீபகாலமாகவே, தமிழ் சினிமாவில் நாயகிகள் பலர் பாடகிகளாகவும் மாறி வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் சுவாதியும் இணைந்து விட்டார்.

English summary
Actress Swathi of Subramaniapuram fame turns singer now. We hear that Swathi will soon sing a kuthu number for Appatakkar, , which has Jayam Ravi, Trisha and Anjali in the lead. Sources say that music director Thaman has roped in Swathi and Simbu to sing the peppy song.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil