»   »  சுவாதி கொலை வழக்கு.... இனி நுங்கம்பாக்கம்!

சுவாதி கொலை வழக்கு.... இனி நுங்கம்பாக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் படம் அறிவித்ததிலிருந்து ஏதாவது ஒரு ரூபத்தில் படத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

இதன் விளைவு... படத்தின் தலைப்பை நுங்கம்பாக்கம் என்று மாற்றிவிட்டார் இயக்குநர்.


சுவாதி கொலை

சுவாதி கொலை

கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் சுவாதி எனும் இளம்பெண். இந்தக் கொலையின் பின்னணி இன்னமும் மர்மமாகவே உள்ளது. இந்தக் கொலையைச் செய்தவர் என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் இறந்தார்.


புதிய படம்

புதிய படம்

இந்தப் பின்னணியை வைத்து சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தார் இயக்குநர் எஸ்டி ரமேஷ் செல்வன். அறிவிப்பு வெளியானதும், ராம்குமாரின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போலீசில் புகார் செய்தார்.


வழக்கு

வழக்கு

மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குநர் ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் சுப்பையா மற்றும் கதை எழுதிய ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இந்த வழக்கில் தங்களைக் கைது செய்யக் கூடாது என மூவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்க, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்.தலைப்பு மாற்றம்

தலைப்பு மாற்றம்

இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கு படத்தின் தலைப்பை மாற்றியுள்ளார் இயக்குநர். இப்போது தலைப்பை நுங்கம்பாக்கம் என்று மாற்றியுள்ளனர்.


வேற கதை

வேற கதை

மேலும் "இது சுவாதி கொலை, ராம்குமார் பின்னணி எதைப் பற்றியும் குறிப்பிடவில்லை. இது ஒரு கற்பனைக் கதை. சுவாதி கொலை போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள படம்," என்று இயக்குநர் ரமேஷ் செல்வன் கூறியுள்ளார்.


English summary
Swathy Kolai Vazhakku movie title has been changed as Nungambakkam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil