»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விபச்சாரத்தில் ஈடுபட்ட டி.வி. நடிகை சுவேதா மற்றும் நடிகர் சாரகேஷ் ஆகியோரை போலீஸார்கைது செய்தனர்.

சமீபகாலமாக விபச்சாரத்தில் ஈடுபடும் டி.வி. மற்றும் சினிமா நடிகைகளை போலீஸார் குறிவைத்துப்பிடித்து வருகின்றனர். பிடிபட்டவர்களில் மாதுரி, புவனேஸ்வரி ஆகியோர் குறிப்படித்தக்கவர்கள்.இந்நிலையில் மற்றொரு டி.வி. நடிகையும் பிடிபட்டுள்ளார்.

சமீபத்தில் கோடம்பாக்கம் பகுதியில் திரைப்படங்களில் குழு நடனங்களில் ஆடி வரும் ஜோதி,நூர்ஜஹான் என்ற நூரி, ராஜேஸ்வரி, லட்சுமி மற்றும் திரைப்பட ஏஜெண்ட் அப்துல் ரஹ்மான்ஆகியோரை விபச்சார வழக்கில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் சுவேதா பற்றியது.

வளசரவாக்கம் வெங்கடசுப்ரமணியம் நகரில் சுவேதா வசித்து வருகிறார். அவருடன் சாரகேஷும்வசித்து வருகிறார். சுவேதாவின் தாயார் நங்கநல்லூரில் தனியாக வசித்து வருகிறார்.

சுவேதா கடந்த இரண்டு ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்குதுணையாக சாரகேஷ் இருப்பதாகவும் அப்துல் ரஹ்மான் போலீஸாரிடம் தெரிவித்தார். கிடைக்கும்பணத்தை ஆளுக்குப் பாதியாக சுவேதாவும் சாரகேஷும் எடுத்துக் கொள்வார்களாம்.

இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். விபச்சாரத் தடுப்புப் பிரிவுஇன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் போனில் சுவேதாவுடன் பேசினார்.

தான் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி அதிபர் என்றும், அடிக்கடி வெளிநாடுக்குப் போய்விட்டு ஊர் திரும்பும் வழியில், சென்னையில் நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம்என்றும், தற்போது சுவேதாவுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து வடபழனி அருகில் உள்ள ஒரு ஹோட்டல் பெயரைக் குறிப்பிட்டு அங்கு நிற்குமாறுசுவேதா கூறியுள்ளார். இதையடுத்து மாறுவேடத்தில் ராஜேந்திரன் அங்கு சென்று காருடன்காத்திருந்தார்.

அப்போது சுவேதாவும் சாரகேஷும் அங்கு வந்தனர். இருவரும் காருக்குள் ஏறிக் கொண்டனர்.பின்னர் அவர்களிடம் ராஜேந்திரன் பேசியபடி ரூ.10,000 பணத்தைக் கொடுத்தார். பிறகு தனதுஇருப்பிடத்திற்குச் செல்லலாம் என்று கூறியபடி காரை செலுத்தினார் ராஜேந்திரன்.

சில நிமிடங்களில் உதவி கமிஷனர் விஜயகுமாரியின் ஜீப் அந்தக் காரை வழிமறித்து நின்றது. காரில்இருந்த சுவேதா, சாரகேஷ் ஆகியோரை விபச்சாரத் தடுப்பு வழக்கில் கைது செய்வதாக போலீஸார்தெரிவித்தனர். அப்போதுதான், கஸ்டமராக வந்தது இன்ஸ்பெக்டர் என்று சுவேதாவுக்கும்சாரகேஷுக்கும் தெரிய வந்தது.

கைதாகியுள்ள சுவேதா, இயக்குநர் கே. பாலச்சந்தர் தயாரித்து, ஜெயா டி.வியில் ஒளிபரப்பான"அண்ணி" தொடரில் நடித்து புகழ் பெற்றவர். பாலச்சந்தர் தயாரிக்கும் மற்றொரு தொடரான"இணை கோடுகள்" தொடரிலும் நடித்து வருகிறார் சுவேதா.

இது தவிர மேலும் சில டி.வி. தொடர்களிலும் நடித்து வரும் சுவேதா ஒரு சினிமாவிலும்நடித்துள்ளார். அதற்குள் விபச்சார வழக்கில் சிக்கிக் கொண்டார்.

சுவேதாவுடன் சேர்ந்து சிக்கியுள்ள சாரகேஷும் "அண்ணி"யில் நடித்துள்ளார். தற்போது "வரம்"உள்ளிட்ட சில மெகா சீரியல்களில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு "அமுல் பேபி" போல இருக்கும்இவரா சுவேதாவுக்கு பாதுகாப்பாக சென்று வந்தார் என்று டி.வி. நடிகர்கள் வட்டாரத்தில் பரபரப்புஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil