»   »  நடிகர் சங்கத் தேர்தல்: நாசருக்கு 1... சரத்குமாருக்கு 2!

நடிகர் சங்கத் தேர்தல்: நாசருக்கு 1... சரத்குமாருக்கு 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச் சீட்டு எண் (சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது. விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசருக்கு எண் 1-ம், எதிரணியில் உள்ள சரத்குமாருக்கு எண் 2-ம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

Symbols announced for Nadigar Sangam election

நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் தேர்தல் களத்தில் உள்ளன. தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான வாக்குச்சீட்டு எண்களை (சின்னங்களை) தேர்தல் நடத்தும் அதிகாரி ஈ.பத்மநாபன் வெளியிட்டுள்ளார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சரத்குமாருக்கு '2' என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அணியின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசருக்கு "1' என்கிற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ராதாரவிக்கு '1' என்ற சின்னமும், நடிகர் விஷாலுக்கு '3' என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் விஜயகுமாருக்கு '5' என்ற சின்னமும், நடிகர் சிம்புவுக்கு '4' என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாசர் அணியின் சார்பாக துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கருணாஸுக்கு '1' என்கிற சின்னமும், பொன்வண்ணனுக்கு '3' என்கிற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் எஸ்.எஸ்.கண்ணனுக்கு '1' என்கிற சின்னமும், நாசர் அணியின் சார்பில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் கார்த்திக்கு '2' என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

English summary
The election officer of Nadigar Sangam has announced symbols for candidates who contesting in the election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil