»   »  மகன் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு தடை கோரும் தந்தை டி.ஆர்.?

மகன் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு தடை கோரும் தந்தை டி.ஆர்.?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியாகும் அச்சம் என்பது மடமையடா படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் இயக்குனர் டி.ராஜேந்தர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா. ஜூலை மாதமே வெளியாவதாக இருந்த படம் செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாவதாக கவுதம் தற்போது அறிவித்துள்ளார்.


T. R to go to court to stop the release of AYM?

படப்பிடிப்பின்போது சிம்பு ஒத்துழைக்கவில்லை என்றும், பிற பட வேலைகளில் பிசியாகி இதை புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் ஒரு வழியாக பட வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.


இந்நிலையில் படத்தை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறாராம் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர். சிம்புவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் முழுவதையும் கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்கிறாராம் டி.ஆர்.


முதலில் மகனால் தள்ளிப் போன படத்திற்கு தற்போது தந்தையால் பிரச்சனை வருகிறது.

English summary
According to sources, T. Rajendar is going to court to seek a ban on Simbu's Achcham Yenbathu Madamaiyada.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil