»   »  நெகிழ்ந்து உருகி, அனல் பறக்கப் பேசிய டி.ராஜேந்தர்.. துள்ளி ஓடிக் கட்டிப்பிடித்த விஜய்...!

நெகிழ்ந்து உருகி, அனல் பறக்கப் பேசிய டி.ராஜேந்தர்.. துள்ளி ஓடிக் கட்டிப்பிடித்த விஜய்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி ஆடியோ விழாவில் பெரும் உருக்கமான காட்சிகள் நேற்று அரங்கேறின. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் நடிகர் விஜய்யைப் புகழ்ந்து, உருகி, கண்ணீர் மல்கப் பேசப் பேச அதைப் பார்த்து விட்டு பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த விஜய் துள்ளி ஓடி மேடைக்குச் சென்று ராஜேந்தரைக் கட்டிப்பிடித்து அணைத்து அவரை அமைதிப்படுத்தினார்.

புலி ஆடியோ வெளியீடு நேற்று மாலை பிரமாண்டமாக மகாபலிபுரத்தில் நடந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே பாடல்கள் குறித்த விவரங்கள் வெளியாகி விட்டன இணையதளத்தில்.

புலி ஆடியோ விழாவில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, இயக்குநர் சிம்பு தேவன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்டோரும், சிறப்பு விருந்தினர்களாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கில்லி மாதிரி துள்ளித் திரிந்த விஜய்

கில்லி மாதிரி துள்ளித் திரிந்த விஜய்

பட விழாவில் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக காணப்பட்டார் விஜய். முதல் நபராக விழாவுக்கு வந்து விட்ட அவர் விழாவுக்கு வந்த அனைவரையும் உற்சாகமாக வரவேற்றார்.

புலிப் பாட்டுக்கு ஆட்டம்

புலிப் பாட்டுக்கு ஆட்டம்

பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது. அதில் புலி படப் பாடல்களுக்கு நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர். ஏண்டி ஏண்டி பாடலை ஸ்ருதி மேடையில் பாடினார். அப்ளாஸ் அள்ளிச் சென்றது.

உருகிப் போன டி.ராஜேந்தர்

உருகிப் போன டி.ராஜேந்தர்

நிகழ்ச்சியில் ராஜேந்தர் பேச்சுதான் முக்கிய ஹைலைட்டாக மாறியது. விஜய்யை வாயாரப் புகழ்ந்து தள்ளி விட்டார் மனிதர். நிறுத்தாமல் கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கும் மேலாக பொறிந்து தள்ளி விட்டார் விஜய்.

நீதான் உண்மையான தமிழன்

நீதான் உண்மையான தமிழன்

டி.ராஜேந்தர் பேசுகையில், விஜய் ஒரு உண்மையான தமிழன். என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்று தெரிந்தும் தனது சகோதரனாக நினைத்து அவனுடைய படம் வெளிவர உதவி செய்துள்ளார். அவரது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்னைச் சுத்தி

இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்னைச் சுத்தி

தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்டே வசனங்கள் கத்தி. நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி என்றார் ராஜேந்தர்.

துள்ளி ஓடி வந்த விஜய்

ராஜேந்தர் பேசப் பேச கூட்டம் ஆரவாரம் செய்தது. விஜய்க்கும் சந்தோஷம், குஷி தாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ராஜேந்தரின் பேச்சில் வேகம் பிடித்தது. இதையடுத்து விஜய் துள்ளி எழுந்து வேகமாக மேடைக்கு ஓடினார். மேடைக்குப் போய் ராஜேந்தரை கட்டி அணைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

விடாமல் விரட்டிய ராஜேந்தர்

விடாமல் விரட்டிய ராஜேந்தர்

சால்வை போர்த்தி ராஜேந்தரைக் கெளரவித்தார். ஆனாலும் ராஜேந்தர் விடவில்லை. தொடர்ந்து விஜய்யைப் புகழ்ந்து தள்ளி விட்டார். இதனால் விஜய்யும் ஒன்றும் செய்யவி்ல்லை. அமைதியாக அவர் அருகிலேயே நின்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ராஜேந்தரின் புலி ஆட்டம்

ராஜேந்தரின் புலி ஆட்டம்

உண்மையில் நேற்றைய விழா ராஜேந்தரால் பயங்கர கலகலப்பாகி விட்டது. இதனால் விஜய்க்கு மிகப் பெரிய சந்தோஷமாம். அவரது ரசிகர்களும் ராஜேந்தரின் பேச்சுக்கு உற்சாகமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.

சிம்புவுக்கு உதவி செய்த விஜய்

சிம்புவுக்கு உதவி செய்த விஜய்

வாலு பட விவகாரத்தில் தானாகவே முன்வந்து சிம்புவுக்கு உதவி செய்து அவரது மனதில் இடம் பிடித்தார் விஜய் என்பது நினைவிருக்கலாம். சிம்பு, தீவிர அஜீத் ரசிகர் என்பது முக்கியமானது.

English summary
Director Vijaya T Rajendhar has hailed actor Vijay for his timely help to his son Simbhu for his Vaalu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil