»   »  மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா!

மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா இயக்குநர் - நடிகர் டி ராஜேந்தர் தாத்தாவாகி உள்ளார். அவரது மகள் இலக்கியா - அபிலாஷ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

டி.ராஜேந்தரின் மகள் தமிழ் இலக்கியாவிற்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.

T Rajendar now becomes grandpa

கர்பமாக இருந்த தமிழ் இலக்கியா நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தங்களுக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியை .மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி டி.ராஜேந்தர்-உஷா ராஜேந்தர், சகோதரர் சிலம்பரசன் ஆகியோர் கொண்டாடினர்.

சமீபத்தில்தான் டிஆர் மகன் சிம்பு அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் தாத்தா வேடம் போட்ட டீசர் வெளியானது. அடுத்த சில தினங்கள் டிஆர் தாத்தாவான சேதி வந்துள்ளது.

English summary
Director - Actor T Rajendar is become grand father for a male child.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil