»   »  தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! - டி ராஜேந்தர்

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! - டி ராஜேந்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணங்களைக் குறைக்க வேண்டும், பார்க்கிங் கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் - இயக்குநர் டி ராஜேந்தர் வற்புறுத்தினர்.

டிஜிட்டல் நிறுவனங்களான யுஎப்ஓ, க்யூப் போன்றவை கட்டணம் என்ற பெயரில் தயாரிப்பாளர்களைச் சுரண்டுவதாகக் கூறி, அவற்றைக் கண்டித்து உயர்வை கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில் திரையுலக அமைப்புகள் பங்கேற்றன.

இதில் கலந்து கொண்டு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசுகையில், "தமிழ் திரையுலகம் நிறைய பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது. அந்த பிரச்சினைகளில் கியூப், யூ.எப்.ஓ. டிஜிட்டல் நிறுவனங்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புக்காகவே இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

இன்னுமா கடன் தீரல..?

இன்னுமா கடன் தீரல..?

முன்பெல்லாம் படங்களுக்கு ரூ.75 ஆயிரம்தான் பிரிண்ட்டுக்கென செலவானது. டிஜிட்டல் நிறுவனங்கள் ஒவ்வொரு தியேட்டரிலும் புரஜெக்டரை நிறுவி ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிட்டு நிறுவனமே அந்த தொகைக்கு கடனை ஏற்பாடு செய்து கொடுத்தனர். தியேட்டர்களில் திரையிடும் விளம்பர கட்டணத்தில் இருந்தும் பெருந்தொகை எடுத்துக் கொண்டனர்.

2005-ல் இந்த புரஜெக்டரை நிறுவினார்கள். 10 வருடங்கள் ஆகியும் ரூ.5 லட்சம் கடன் தீர்க்கப்படவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இரு டிஜிட்டல் நிறுவனங்களும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறப்பட்டது. இனிமேல் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.

தயாரிப்பாளர்களுக்கு மரியாதை

தயாரிப்பாளர்களுக்கு மரியாதை

விளம்பர வருமானம் மூலம் ரூ.4 கோடி வரை அந்த நிறுவனங்கள் ஈட்டி உள்ளன என்று கூறப்பட்டது. ஆர்.கே. செல்வமணி ரூ,.560 கோடி என்றார். அதில் தயாரிப்பாளர்களும் உரிய சலுகை கேட்கிறார்கள். அவர்கள்தான் முதலாளிகள். எனவே தயாரிப்பாளர்களுக்கு உரிய மரியாதை வேண்டும் எல்லோருக்கும் வேலை கொடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தான். எனவே தயாரிப்பாளர் கோரிக்கைக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் செவிசாய்க்க வேண்டும்," என்றார்.

டி ராஜேந்தர்

டி ராஜேந்தர்

டி. ராஜேந்தர் பேசும் போது, ‘‘தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். பெரிய படங்களுக்கும் புது படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணங்களை நிறுத்த வேண்டும்'' என்றார்.

விவேக்

விவேக்

உண்ணாவிரதத்தில் விவேக் பேசுகையில், "டிஜிட்டல் நிறுவனங்களால் தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். திரையுலகினர் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். சரத்குமார் சொன்னால் நடிகர்கள் கேட்க வேண்டும். கலைப்புலி தாணு சொன்னால் தயாரிப்பாளர்கள் கேட்க வேண்டும். உங்களுக்கு சோற்றுக்கு வழி ஏற்படுத்துவதற்கு அவர்கள் போராடுகிறார்கள். புதுப்படம் எடுத்தால் அதை வெளிநாடுகளில் திருடி இணைய தளங்களில் வெளியிடுகிறார்கள். நாமும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களை வைத்து அதை தடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் புரஜெக்டர் மூலம் ஒவ்வொரு தியேட்டர்களிலும் பிலிம்சுருள் பெட்டிகளை அனுப்பி படங்கள் திரையிடப்பட்டன. இப்போது அது கியூப், யு.எப்.ஓ. டெக்னாலஜிலாக மாறியுள்ளது. இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன் பேசுகையில், "தமிழ் திரையுலகம் 10 வருடமாக தேய்ந்து கொண்டு இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்படுகின்றன. விநியோகஸ்தர்கள் இனம் மறைந்து விட்டது. தியேட்டர்காரர்ள் திரையரங்குகளை குத்தகைக்கு விடுகிறார்கள். 40 வருடமாக படங்கள் எடுத்த நான் இப்போது தயாரிப்பை நிறுத்திவிட்டேன். போட்ட பணத்தை திரும்பி எடுக்க முடியவில்லை. நடுத்தர மக்கள் கூட வீட்டிலேயே படங்களை பார்க்கிறார்கள். எனவே அழியும் இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும்," என்றார்.

ஆர்யா

ஆர்யா

நடிகர் ஆர்யா பேசுகையில், ‘‘டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர். என் நண்பன் படத்தோடு எனது படத்தின் டிரையலைரை சேர்த்து திரையிடவும் பணம் கேட்கிறார்கள்," என்றார்.

English summary
In a fast observed against UFO and Qube companies, director T Rajendar says that the parking fee collecting in theaters and malls should be cancelled immediately.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil