»   »  ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்! - டி ராஜேந்தர்

ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்! - டி ராஜேந்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியும் கமலும் என் நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்று டி ராஜேந்தர் கூறினார்.

சிம்பு, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' படம் தெலுங்கில் வெளியாகிறது. பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்திருந்தார். சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் டி.ராஜேந்தர் தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு தெலுங்கில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் வெளியாவது குறித்து இன்று டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

T Rajendar welcomes Rajini, Kamal to politics

அப்போது அவரிடம் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டி ராஜேந்தர், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமலும் எனது நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிறைய செய்திகள் கேள்விபடுகிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களும் வரட்டும். வருவேன், வருவேன் என்று சொல்லாமல், உடனடியாக வந்து மக்கள் பணி செய்தால் சந்தோஷம்," என்றார்.

English summary
T Rajesndar has welcomed Rajini and Kamal to politics
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil