»   »  'புலி' பேச்சால் உளைச்சல்... அந்த 3 "கை" இருந்ததால் நான் ஆகலை மொக்கை: டி.ஆர்

'புலி' பேச்சால் உளைச்சல்... அந்த 3 "கை" இருந்ததால் நான் ஆகலை மொக்கை: டி.ஆர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்த புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாராட்டி பேசியதால் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டது.. ஆனாலும் 3 'கை' இருந்ததால் மொக்கை ஆகவில்லை என்று நடிகர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிப்பில் உருவான படம் போக்கிரி ராஜா. இப்படத்தின் தயாரிப்பாளர் பி.டி. செல்வக்குமார். இப்படத்தின் அத்துவுட்டா என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் டி. ராஜேந்தர் பேசியதாவது:

புலி பட இசை வெளியீட்டு விழாவில் புலியைப் பற்றி தொடர்ச்சியாக பேசினேன். எனக்கு புலி என்றால் பிடிக்கும். ஈழத்தமிழர்களுடைய ஆதரவாளன் நான். இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக என் பதவியை ராஜினாமா செய்த பிழைக்கத் தெரியாத தமிழன். அந்த உணர்வு எனக்கு உண்டு.

மன உளைச்சல் ஏற்பட்டது

மன உளைச்சல் ஏற்பட்டது

டி.ஆர் பேசிய அடுக்கு மொழியை மற்றவர்கள் வேறு பார்வையில் பார்த்தால் தப்பில்லை. அது எந்த தொலைக்காட்சியில் வெளியிட்டாங்களோ, அதற்கு யாரெல்லாம் எப்படி பார்த்தார்களோ என்பது கடவுளுக்குத் தெரியும். நான் அந்த விழாவுக்கு சென்ற பிறகு மன உளைச்சலுக்கு ஆளானேன். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.

மூன்று கை- மொக்கை ஆகலை

மூன்று கை- மொக்கை ஆகலை

நான் இங்கு வந்து நிற்பதற்கு கடவுள் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மூன்றும் தான் காரணம். இந்த மூணு கையை வைத்து தான் என் வாழ்க்கை. இந்த மூணு கை இருந்ததால் தான் நான் வாழ்க்கையில் ஆகவில்லை மொக்கை.

நானும் நக்கல் அடிப்பேன்

நானும் நக்கல் அடிப்பேன்

நீ நக்கல் பண்ணினால், நானும் நக்கல் பண்ணுவேன். வாழ்க்கையில் யார் தான் நக்கல் பண்ணவில்லை. நான் அத்தனை புலியை அடுக்கினேன் என்றால் எல்லாமே என் மனதில் இருந்து வந்தது. புலி என்று தலைப்பு வைத்ததிற்கு ஒரு தில் வேண்டும். அந்த தில்லை வைத்து தான் என்னிடம் இருந்து சொல் வந்தது.

குழந்தை ஹன்சிகா..

குழந்தை ஹன்சிகா..

ஹன்சிகா ஒரு குழந்தை மாதிரி. வாலு படத்தில் தாறுமாறு என்ற பாடலை முந்தைய தயாரிப்பாளர் படம்பிடிக்கவில்லை. நான் ரூ1. கோடி செலவில் அதை படம் பிடித்தேன். அப்போது ஹன்சிகா, டி ஆர் அங்கிள் கேட்டாரா என்று சொல்லி வந்து எந்த பலனையும் எதிர்பார்க்காமல் வந்து நடித்துக் கொடுத்தார்.

இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்

English summary
Actor T Rajendar said that he very worried for Puli Audio relese speech.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil