»   »  ரெண்டே 2 பாட்டு.. நடிச்சுக் கொடுத்துட்டு நடையைக் கட்டு.. நயன் மீது புகாருடன் கிளம்பிய டி.ஆர்.

ரெண்டே 2 பாட்டு.. நடிச்சுக் கொடுத்துட்டு நடையைக் கட்டு.. நயன் மீது புகாருடன் கிளம்பிய டி.ஆர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு திரைப்படத்திற்கு நயன்தாரா கால்ஷீட் அளிக்க மறுக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர்.

சிம்புவின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வாலு வெளியானதை அடுத்து, தற்போது இது நம்ம ஆளு திரைப்படத்தை வெளியிட முயற்சி எடுத்து வருகிறார் சிம்புவின் தந்தையும் படத்தின் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர்.


பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு- நயன்தாரா இணைந்து நடித்து வந்த படம் ‘இது நம்ம ஆளு, தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.


பாடல் காட்சிகளால் தாமதம்

பாடல் காட்சிகளால் தாமதம்

இது நம்ம ஆளு படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும் 2 பாடல் காட்சிகள் பாக்கியிருப்பதால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின.


நயனால் ஏற்பட்ட தாமதம்

நயனால் ஏற்பட்ட தாமதம்

அந்த 2 பாடல் காட்சிகளிலும் நயன்தாரா நடிக்க மறுக்கிறார் அவரால் தான் படம் தாமதமாகிறது என்று தொடர்ந்து, படத்தின் நாயகியான நயன்தாராவைப் பற்றியும் புகார்கள் எழுந்தன.


நயன்தாரா மீது புகார்

நயன்தாரா மீது புகார்

இந்நிலையில் படத்தின் நாயகி நயன்தாரா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார், அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-


‘‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது. ‘இது நம்ம ஆளு' படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.நயன்தாரா மறுப்பு

நயன்தாரா மறுப்பு

இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார். பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம்.


சிம்புவை தவறாக பேசினால்

சிம்புவை தவறாக பேசினால்

நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும். நயன்தாராவிடம், சிம்பு ‘கால்ஷீட்' கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.'' இவ்வாறு அந்த புகாரில் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார். இதனால் தற்போது திரையுலகில் லேசான பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது நம்ம ஆளு - நயன்தாரா மனது வைப்பாரா?


சிம்புவோட படம் பிரச்சினை இல்லாம வெளிவந்ததா சரித்திரம் இருக்கக் கூடாது....
English summary
Idhu namma Aalu Movie Issue, T.Rajendar Files a Complaint Against Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil